மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் இந்த உணவுகள் வேண்டாமே...

Heart Health: நமது உணவு பழக்கவழக்கங்களை மேம்படுத்துவதன் மூலம், மாரடைப்பு அபாயத்தை பன்மடங்கு குறைக்கலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 30, 2022, 01:10 PM IST
  • இதயத்திற்கு இரத்த ஓட்டம் தடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகிறது.
  • இறைச்சியை அதிகமாக உட்கொள்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகரிக்கிறது.
  • பால் பொருட்களும் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்.
மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் இந்த உணவுகள் வேண்டாமே... title=

இன்றைய துரிதாமான வாழ்க்கை முறையாலும், தவறான உணவுப் பழக்கத்தாலும், மனிதர்களின் உடல் பல நோய்களின் அடைக்கலமாக மாறி வருகிறது. தற்போதைய மோசமான உணவு பழக்கத்தினால் இளைஞர்களுக்கும் மாரடைப்பு அபாயம் அதிகரித்து வருகிறது. 

இதயத்திற்கு இரத்த ஓட்டம் தடை படும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத்தின் நாளங்களில் கொழுப்பு படிவது தான் முக்கிய காரணம் இதுபோன்ற சில செயல்களை நாம் தெரிந்தோ தெரியாமலோ தினமும் செய்து வருகிறோம், அதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. நமது உணவு பழக்கவழக்கங்களை மேம்படுத்துவதன் மூலம், மாரடைப்பு அபாயத்தை பன்மடங்கு குறைக்கலாம். எனவே, மாரடைப்பு அபாயத்தை ஏற்படுத்தும் உணவை விட்டு விலகி இருந்தல் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

மேலும் படிக்க | Heart Health: இதய நோய்களை மருந்து இல்லாமல் குணப்படுத்த செய்ய வேண்டியவை என்ன

இறைச்சிக்கு NO சொல்லுங்கள்

இறைச்சியை அதிகமாக உட்கொள்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகரிக்கிறது. குறிப்பாக, இதய நோய் உள்ளவர்கள், கொழுப்பு அதிகம் இருப்பவர்கள், அதிக அளவில் சாப்பிடாமல் சிறிது விலகி இருக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் பிரச்சனை அதிகரிக்கலாம். இறைச்சியை உட்கொள்வதால் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது . இப்படிப்பட்ட நிலையில் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகும் போது மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றது.

சிக்கன் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும்

கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் சிக்கன் சாப்பிடக்கூடாது. அதை அதிகமாக உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு கேட்டினை ஏற்படுத்தும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிக்கன் பிரியர்கள் அதிலிருந்து சற்று தள்ளி இருப்பது நல்லது. இல்லையெனில் பிரச்சனை பிற்காலத்தில் அதிகரிக்கலாம்.

பால் பொருட்களும் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்

பால் பொருட்களும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. சிலர் பால் பொருட்களை மிக அதிக அளவில் சார்ந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். இவை கொழுப்பு அதிகம் உள்ளவை. எனவே கொழுப்பு அதிகம் உள்ள சீஸ் போன்ற பால் உணவுகளை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்கவும். இல்லையெனில் உங்கள் பிரச்சனை அதிகரிக்கலாம்.

மைதா உணவுகள்

எந்த சூழ்நிலையிலும் மைதா உடலுக்கு நல்லதல்ல. குறிப்பாக இதய நோயாளிகளுக்கு இது மிகவும் ஆபத்தானது. இதனை உட்கொள்வதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இதய துடிப்பை சீராக்கும் ‘பொட்டாஷியம்’; இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News