மூன்றே மாதங்களில் தொப்பை தொலைந்துவிடும்: இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க
Weight Loss Tips: மூன்றே மாதங்களில் உங்களை நீங்களே ஒரு புதிய வடிவில் பார்க்க முடியும்!! ஆம், அதற்கான சில உதவிக்குறிப்புகளை பின்பற்றினால் கை மேல் பலன் கிடைக்கும்.
மூன்று மாதங்களில் உடல் எடையை குறைக்க டிப்ஸ்: உடல் எடையை குறைக்க நாம் பல வழிகளில் முயற்சி செய்கிறோம். குறிப்பாக தொப்பை வந்துவிட்டால், அதை சரி செய்வது மிக கடினமாகிவிடுகிறது. உடல் எடையை குறைக்க நமது வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டியது மிக அவசியமாகும். எடை அதிகரிப்பதற்கு உங்கள் உணவே முக்கிய காரணமாகும். அன்றாட வாழ்க்கையில் தேவை இல்லாத, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது உங்கள் உடலில் தவறான விளைவை ஏற்படுத்துகிறது. எடை அதிகரிப்பால் பல நேரங்களில் பலர் பல சங்கடங்களுக்கு ஆளாவது உண்டு.
உடல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதானது அல்ல. இதை மெதுவாக சீராக செய்ய வேண்டும். அப்போதுதான் நிலையான நல்ல முடிவுகளை நாம் பெற முடியும். நம்மில் பலர் பல வித முயற்சிகளை செய்தும் தொப்பை மற்றும் இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்க முடியாமல் அவதிப்படுகிறோம். இதற்கு உங்கள் வாழ்க்கையில் சில முக்கிய மாற்றங்களை நீங்கள் கொண்டு வர வேண்டும். மூன்றே மாதங்களில் உங்களை நீங்களே ஒரு புதிய வடிவில் பார்க்க முடியும்!! ஆம், அதற்கான சில உதவிக்குறிப்புகளை பின்பற்றினால் கை மேல் பலன் கிடைக்கும். இதற்கான முக்கிய டிப்ஸ் பற்றி இந்த பதிவில் காணலாம்.
3 மாதங்களில் உடல் எடையை குறைப்பது எப்படி?
கலோரிகளை குறைக்கவும்
இந்தியாவின் உணவுமுறையில் அதிக அளவில் எண்ணெ பதார்த்தங்களும் இனிப்பு வகைகளும் உள்ளன. ஆனால் இதுபோன்ற விஷயங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. மேலும் இவை எடை அதிகரிப்பதற்கும் காரணமாக அமைகின்றன. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், குறைந்த கலோரி உணவை சாப்பிடுவது அவசியம். இதைத் தொடர்ந்து செய்யாவிட்டால், எடை குறையும் என்று எதிர்பார்ப்பது வீண். ஆகையால் குறைந்த கலோரி அளவு கொண்ட உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | சம்மரிலும் சைனஸ் பிரச்னையா... உடனடி நிவாரணத்திற்கு இதனை செய்யுங்கள்!
உடற்பயிற்சி செய்யுங்கள்
உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான உணவுகளை மட்டும் சாப்பிடுவது போதாது. இதற்காக உங்கள் நேரத்தை உடற்பயிற்சியில் செலவிடுவதும் அவசியம். உடல் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தால், உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வது எளிதாக இருக்கும். நீங்கள் பல வழிகளில் உடற்பயிற்சி செய்யலாம். இதற்காக, சிலர் மணிக்கணக்கில் ஜிம்மில் செலவிடுகிறார்கள். பூங்காக்கள் அல்லது இதற்கான இடங்களில் ஓடுதல், நடைபயிற்சி செய்தல் ஆகியவையும் நல்லது. யோகாவும் விரும்பிய பலனைத் தரும்.
தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும்
உங்களால் கடுமையான உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டால், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தினமும் 10,000 ஸ்டெப்ஸ்கள் நடக்கவும். இதைக் கண்காணிக்க, இப்போது சந்தையில் பல ஸ்மார்ட் வாட்ச்கள் வந்துள்ளன. இது சாத்தியமில்லை என்றால், மொபைல் ஆப் மூலம், நீங்கள் எவ்வளவு அடிகள் நடந்தீர்கள் என்பதைக் கண்டறியவும். இது உங்கள் எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல், உங்கள் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ