சம்மரிலும் சைனஸ் பிரச்னையா... உடனடி நிவாரணத்திற்கு இதனை செய்யுங்கள்!

Home Remedies For Sinus: கோடை காலத்தின் வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு பலரும் ஏசியில் பலமணிநேரங்கள் இருப்பதையும், குளிர்ச்சியான உணவை உண்பாதலும் சைனஸ் பிரச்னையை எதிர்கொள்ள நேரிடும்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 14, 2023, 05:36 PM IST
  • அதில் இருந்து தப்பிக்க சில எளிய வழிகளை இங்கு காணலாம்.
  • சைனஸ் பிரச்னையால் அதிக தும்மல் ஏற்படும்.
  • இதனால், உங்கள் உடல் சோர்வடையலாம்.
சம்மரிலும் சைனஸ் பிரச்னையா... உடனடி நிவாரணத்திற்கு இதனை செய்யுங்கள்! title=

Home Remedies For Sinus: தற்போது கோடை காலம் நடந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சைனஸ் பிரச்சனை பெரும்பாலானோரை தொந்தரவு செய்யும். ஆம், சைனஸ் இருக்கும்போது பல அறிகுறிகள் தெரியும். சைனஸ் பிரச்னை இருப்பதால் காலையில் எழுந்ததில் இருந்து வீட்டை விட்டு வெளியேறும் வரை உங்களுக்கு பலமுறை தொடர்ந்து தும்மல் வரலாம். இதனால், உங்களின் உடல் சோர்வாகும். உங்களின் அன்றாட வேலைகளை செய்யவே மிகவும் சிரமமாக இருக்கும். அதுவும், கோடை காலத்தில் கூடுதல் சிரமத்தை அளிக்கும்.

மூக்கில் இருந்து தொடர்ந்து நீர் ஒழுகுதல், முகத்தில் வலி, காய்ச்சல் போன்றவை இந்த அறிகுறிகளில் ஒன்றாகும். இந்த காலகட்டத்தில் பலருக்கும் சளி பிடித்த பிறகு இந்த பிரச்சனை ஏற்படுகிறது. ஏனென்றால், இன்றைய காலக்கட்டத்தில் வெப்பத்தில் இருந்து தங்களைக் தற்காத்துக் கொள்ள மக்கள் அதிக நேரம் ஏசியிலும், குளிர்ச்சியான உணவையும் சாப்பிடுவதால் தான் எளிதாக சளி பிடிக்கிறது.

அத்தகைய சூழ்நிலையில், சைனஸ் பிரச்சனை உங்களைத் தொந்தரவு செய்யலாம். உங்களுக்கும் சைனஸ் பிரச்னை இருந்தால், இந்தப் பிரச்சனையில் நிவாரணம் பெறுவது என்பதை இங்கு காணலாம். 

மேலும் படிக்க | இந்த காய்கறிகளை உணவு தட்டில் வந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்..!

சைனஸ் பிரச்சனை இருந்தால் இந்த வழிமுறைகளை பின்பற்றவும்:

நீராவி பிடிக்கவும்

சைனஸை அகற்றுவதற்கான எளிய வழி, நீராவி எடுப்பதாகும். சைனஸில் இருந்து நிவாரணம் பெற நீராவி எடுத்துக்கொள்வது எளிதான வழியாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், சைனஸில் நீராவி எடுத்துக்கொள்வது உடலில் உள்ள நீரை வெளியேற்றும், இதனால் நீங்கள் நிம்மதியாக உணர்வீர்கள். நீராவி எடுப்பது மிகவும் எளிதான வழி. 

சூடான சூப் குடிக்கவும்

உங்களின் பல நோய்களுக்கு சூப் நன்மை பயக்கும். மறுபுறம், சூடான சூப்பில் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இது சைனஸ் பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில், நீங்கள் சூப் போன்ற மூலிகை தேநீரையும் பயன்படுத்தலாம். இதிலும் சைனஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். 

தலைக்கு குளித்தால் மிக கவனம்

இது சைனஸ் இருப்பவர்களுக்கு மட்டுமில்லை, அனைவருக்குமானது என்றாலும் சைனஸ் பிரச்னைகள் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அதாவது, நீங்கள் தலைக்கு நீர் ஊற்றி குளித்த பின் முறையாக தலையை துவட்டாமல் ஈரத்துடன் இருக்கக் கூடாது. அப்படி தலை ஈரமாக இருந்தால், சைனஸ் பிரச்னை கூடுதலாகி, உங்களுக்கு சிரமம் அளிக்கக் கூடும்.

(பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொது அறிவை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சிறுநீரக செயலிழப்பை முன்கூட்டியே காட்டும் 5 அறிகுறிகள் - தவிர்த்துவிட வேண்டாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News