மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக செயல்பட்ட கர்நாடக அரசு!
மேகதாதுவில் தமிழகத்தின் நிலைப்பாட்டை எதிர்த்து கர்நாடகா தீர்மானம் நிறைவேற்றியது.
தமிழ்நாட்டிற்க்கும், கர்நாடகாவிற்கும் இடையே வாய்க்கால் வரப்பு தகராறு போல நீண்ட காலமாகவே காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் பிரச்சனை இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த விவகாரம் தற்போது பெரிய சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரில் பட்ஜெட் அறிக்கையின் போது அம்மாநில முதல்வர் பசவராஜ் மேகதாதுவில் அணை கட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்குவது குறித்து அறிவித்தது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க | மேகதாது விவகாரம்: கர்நாடக அமைச்சருக்கு சட்டப்படி பதிலடி தந்த அமைச்சர் துரைமுருகன்
இதனையடுத்து தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் இணைந்து கர்நாடக அரசு மேகதாதுவில் அணை எழுப்பக்கூடாது என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில் கர்நாடக அரசு நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி அணை எழுப்புவதில் உறுதியாக உள்ளது, இதுவரை முதல்வர்களாக இருந்தவர்களும் மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினையுள்ளனர். நம்முடைய தற்போதைய முதல்வரும் இதற்கு எதிராக போராடி வருகிறார் என்று தெரிவித்திருந்தார்.
தமிழக சட்டசபையில் மேகதாது அணை எழுப்புவதற்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு கர்நாடக முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகம் என்ன முடிவு செய்தலும் கர்நாடக அரசு அணை காட்டும் விஷயத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்காது. அணை கட்டப்படும் என்று குறிப்பிட்டபடியே அரசு அணையை கட்டிமுடிக்கும், இதில் நங்கள் உறுதியாக உள்ளோம் என்று தெரிவித்தார். தற்போது இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்திற்கு எதிராக கர்நாடக அரசு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.
மேலும் படிக்க | மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை எதிர்க்க தமிழக அரசு முடிவு!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR