பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் Y+ தரவரிசை பெற்றுள்ளார். ஆதாரங்களின்படி, கங்கனாவுக்கு உள்துறை அமைச்சகம் Y + பாதுகாப்பு வழங்கியுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில நாட்களாக கங்கனா ரனாவத் மற்றும் சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் இடையே சூடான சண்டை நடந்துள்ளது. சஞ்சய் ரவுத்தும் கங்கனாவும் மும்பைக்கு வர வேண்டாம் என்று அவருக்கு அறிவுரை வழங்கியிருந்தனர். சவாலை ஏற்றுக்கொண்ட கங்கனா, மும்பைக்கு வருகிற 9 ஆம் தேதி தான் வரபோவதாகவும், துணிச்சல் இருந்தால் தடுத்து பாருங்கள் என சிவசேனா MP.சஞ்சய் ராவத்துக்கு நடிகை கங்கனா ரனாவத் சவால் விடுத்துள்ளார். மும்பை மாநகரம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் மாறியுள்ளதாக கங்கனா ரனாவத் டிவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார்.


இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சஞ்சய் ராவத், அச்சமாக இருந்தால் மும்பைக்கு வர வேண்டாம் என விமர்சித்திருந்தார். அவரது கருத்துக்கு பதிலளித்த கங்கனா, மும்பை என்பது சிவசேனா கட்சி மட்டுமல்ல என காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.


ALSO READ | பிக் பாஸ் புகழ் ஆரவ் ஜோஷ்வா பட நடிகை ராஹியை கரம்பிடித்தார்...


சிவசேனா தொண்டர்கள் என்ன மிரட்டல் விடுத்தாலும், 9 ஆம் தேதி நிச்சயம் மும்பைக்கு வருவேன் எனவும் குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். இமாச்சல பிரதேசத்தில் தங்கியுள்ள கங்கனாவின் வீட்டுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். 



இந்நிலையில், கங்கனா ரனாவத்துக்கு Y+ பாதுகாப்பு மத்திய அரசு வழங்கியுள்ளது. மும்பை வரும் கங்கனாவுக்கு துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு கொடுப்பார்கள். கங்கனாவின் இல்லத்துக்கும், கங்கனா வெளியே செல்லும் போதும் Y+ வீரர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள். சுழற்சி முறையில் 7 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.