பிக் பாஸ் புகழ் ஆரவ் ஜோஷ்வா பட நடிகை ராஹியை கரம்பிடித்தார்...

ஆரவுக்கும், 'ஜோஷ்வா' படத்தில் நாயகியாக நடித்து வரும் ராஹிக்கும் சென்னையில் திருமணம் நடந்து முடிந்தது..!

Last Updated : Sep 7, 2020, 06:59 AM IST
பிக் பாஸ் புகழ் ஆரவ் ஜோஷ்வா பட நடிகை ராஹியை கரம்பிடித்தார்...

ஆரவுக்கும், 'ஜோஷ்வா' படத்தில் நாயகியாக நடித்து வரும் ராஹிக்கும் சென்னையில் திருமணம் நடந்து முடிந்தது..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஆரவ். 2017 ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர். அந்த நிகழ்ச்சிக்கு முன்பாக 'ஓ காதல் கண்மணி' மற்றும் 'சைத்தான்' ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

பிக் பாஸ் மூலம் பிரபலமானதைத் தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கினார். சரண் இயக்கத்தில் வெளியான 'மார்க்கெட் ராஜா MBBS' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதற்குப் பிறகு 'ராஜபீமா' படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.

Image

ALSO READ | சேலையில் சிக்குன்னு இருக்கும் மோனலிசா..!! இணையத்தில் வைரல்: See Photo

Image

Image

ஆரவுக்கும், 'ஜோஷ்வா' படத்தில் நாயகியாக நடித்து வரும் ராஹிக்கும் செப்டம்பர் 6 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியானது. இருவருமே பல வருடங்களாகக் காதலித்து வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள்.

அதன்படி நேற்று (செப்டம்பர் 6) சென்னையில் ஆரவ் - ராஹி திருமணம் நடைபெற்றது. கரோனா அச்சுறுத்தலால் இருவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சரண், விஜய், ரஞ்சித் ஜெயக்கொடி, வருண், ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆரவ்வுடன் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் நேரில் வந்து மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள். இதர திரையுலகப் பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதளம் மூலம் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

More Stories

Trending News