உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், 1992 ஆம் ஆண்டு, 6ம் தேதி நடந்த கரசேவையின் போது, கட்டுகடங்காத கூட்டம் ஒன்று,  பாபர் மசூதியை இடித்தது. மசூதியை இடிக்க சதி திட்டம் தீட்டியதாக, அத்வானி உள்ளிட்டோர் மீது, ரேபரேலி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வழக்கில், அத்வானி ( LK.Advani) உள்ளிட்டோரை விடுவித்து, நீதிமன்றம், 2001ல் தீர்ப்பு வழங்கியது. அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010ல் இந்த தீர்ப்பை உறுதி செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அத்வானி உள்ளிட்டோர் மீதான வழக்கை விசாரிக்கும் படி, 2017ல் உத்தரவிட்டதோடு, இந்த வழக்கை, ரேபரேலியில் உள்ள வழக்கை, லக்னோ சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது.


இதை விசாரணை செய்த நீதிமன்றம்  பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமா பாரதி  உள்ளிட்ட 32 பேரையும் விடுவித்து லக்னோ சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.


மேலும் படிக்க | பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு: Advani, MM Joshi உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை!!


அந்த தீர்ப்பில் சிபிஐ பல முக்கிய விஷயங்களை குறிப்பிட்டுள்ளது.


சம்பவம் நடந்த அன்று, மதியம் 12 மணி வரை அனைத்தும் இயல்பு நிலையில் தான் இருந்தது. அயோத்தியில், குழந்தை ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் கரசேவை நடத்தப்பட்டது. 


கர சேவகர்களிடம் இந்த இயக்கத்தின் அடையாளமாக, சரயு நதியில் இருந்து ஒரு பிடி மண் எடுத்து வர வேண்டும் என்று தான் கூறப்பட்டது. 


மேலும் ஆர்.எஸ்.எஸ்  (RSS) மற்றும் விஷவ ஹிந்து பரிஷத் தொண்டர்கள், அங்கிருந்த பெண்கள் வயதானவர்கள் ஆகியோர்களுக்கான ஏற்பாட்டை கவனித்து வந்தனர். இதன் மூலம் அவர்கள் எதையும் திட்டமிடவில்லை என்பதையே உணர்த்துகிறது.


கரசேவையை வழிநடத்தியவர்கள், ஆத்திர மூட்டும் வகையில் பேசியதாகவோ, உரை நிகழ்த்தியதாகவோ சான்று ஏதும் இல்லை. 


அப்படி இருக்கும் போது, கரசேவகர்கள் மத்தியில் இருந்து சிலர் திடீரென ஆத்திர மூட்டும் வகையில் கொதித்தெழுந்து பாபர் மசூதியை இடித்தனர்.


இந்நிலையில், உள்துறை அமைச்சகம், டிசம்பர் 2ம் தேதியன்று சமர்பித்த உளவுத் துறை அறிக்கையில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தேச விரோதிகள் அயோத்தியில் உள்ளனர் என்றும், அசம்பாவிதம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதையும் குறிப்பிட்டிருந்தது என சிபிஐ நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது, மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். 


இது நம்மில் பல கேள்விகளை எழுப்புகிறது. அயோத்தியில் ஒரு கட்டத்தில், சமரச நிலை எட்டும் என்ற நிலை ஏற்பட்ட போது, இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில்  ஒரு சமரச தீர்வு ஏற்படுவதை விரும்பாத சக்திகள் அந்த முயற்சியை சதி செய்து முறியடித்தன. 


மேலும் படிக்க | Ayodhya Ram Temple: பாபர் மசூதி கட்டப்பட்டதில் இருந்து ராமர் கோயில் கட்டுமானம் வரை... காலக்கிரமமாக


இதே போன்று அயோத்தி பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட கூடாது என்ற எண்ணத்தில், கர சேவகர்கள்  மத்தியில் புகுந்த தீய சக்திகள், வெளிநாட்டு சக்திகள், குறிப்பாக கூற வேண்டும் என்றால், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீய சக்திகள், கர சேவர்கள் என்ற பெயரில், கூட்டத்தில் ஊடுருவி பாபர் மசூதியை இடித்து பிரச்சனையை தீ ஊற்றியதா என்ற கேள்வி எழாமல் இல்லை. 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR