Ayodhya Ram Temple: பாபர் மசூதி கட்டப்பட்டதில் இருந்து ராமர் கோயில் கட்டுமானம் வரை... காலக்கிரமமாக

அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில்,பல நூறாண்டுகளாக நீடித்த சர்ச்சைகளுக்கு பிறகு, சட்டத்தின் அனுமதியுடன் 2020ஆம் ஆண்டில் ராமர் ஆலயம் மீண்டும் கட்டப்படுகிறது. இன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்.. 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டு இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவடைகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 6, 2020, 10:46 AM IST
  • முதலாவது முகலாய மன்னரான பாபரால் 16ம் நூற்றாண்டில் அயோத்தி நகரில் கட்டப்பட்டது பாபர் மசூதி ...
  • ராம ஜென்மபூமி-பாபர் மசூதி கட்டமைப்பு 1992ஆம் ஆண்டில் இடிக்கப்பட்டது...
  • 2019 நவம்பர் 9ஆம் தேதியன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கியது...
Ayodhya Ram Temple: பாபர் மசூதி கட்டப்பட்டதில் இருந்து ராமர் கோயில் கட்டுமானம் வரை... காலக்கிரமமாக title=

புதுடெல்லி: அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில்,பல நூறாண்டுகளாக நீடித்த சர்ச்சைகளுக்கு பிறகு, சட்டத்தின் அனுமதியுடன் 2020ஆம் ஆண்டில் ராமர் ஆலயம் மீண்டும் கட்டப்படுகிறது. இன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்.. 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டு இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவடைகிறது.  பாபர் மசூதி கட்டப்பட்டதில் இருந்து ராமர் கோயில் கட்டுமானம் வரை காலக்கிரமமாக முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு:

இந்து மதக் கடவுளான ராமர் அயோத்தியில் பிறந்தவர் என்பது புராணங்களிலும், இதிகாசங்களிலும் காணப்படுகிறது. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில், குழந்தை ராமரின் ஆலயம் கட்டப்பட்டிருந்தது. முகலாய பேரரசர் பாபரின் தளபதியான மீர் பக்கி என்பவர், அயோத்தியில் குழந்தை ராமருக்காக கட்டப்பட்ட ஆலயத்தை இடித்து, தனது அரசரின் கட்டளையை நிறைவேற்றும் வகையில்  மசூதியைக் கட்டியதாகவும் இந்துக்கள் நம்புகின்றனர். ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில் பாபர் மசூதியும், ராமர் கோயிலும் ஒற்றைச் சுவரால் பிரிக்கப்பட்டிருந்தது. 

1528
பாபர் மசூதி (Babri Mosque) முதலாவது முகலாய மன்னரான பாபரால் (Babar) 16ம் நூற்றாண்டில் அயோத்தி நகரில் கட்டப்பட்ட மசூதி ஆகும். 1940களுக்கு முன்னர் இது ’பிறந்த இடத்தின் மசூதி’ (Masjid-i Janmasthan) என அழைக்கப்பட்டது. 

935 AH (1528-29) இல் முகலாய தளபதி மிர் பாக்கியால் (Mir Baqi), ‘ராம் கோட் மொகல்லா’ என்ற குன்றின் மீது பாபர் மசூதி கட்டப்பட்டது என பாபர் மசூதி அமைந்துள்ள வளாகத்தில் உள்ள கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது.  
1885
நிர்மோஹி அகாராவைச் சேர்ந்த மஹந்த் ரகுபீர் தாஸ் (Mahant Raghubir Das) என்பவர், பீடம் அமைக்கப்பட்டுள்ள இடம் தான் ராமர் பிறந்த இடம் என்று உரிமை கோரினார். சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி-பாபர் மசூதி மஸ்ஜித் கட்டமைப்பிற்கு வெளியே விதானம் ஒன்றை கட்ட அனுமதி கோரி ஃபைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.

1949
சர்ச்சைக்குரிய கட்டமைப்பிற்கு வெளியே உள்ள மைய குவிமாடம் ஒன்றின் கீழ் குழந்தை ராமரின் சிலைகள் வைக்கப்பட்டன.

1959
சர்ச்சைக்குரிய இடத்தை தன் வசம் ஒப்படைக்க  நிர்மோஹி அகாரா பிரிவு கோரிக்கை விடுத்தது.

1989
சர்ச்சைக்குரிய கட்டமைப்பு தொடர்பாக, அப்போதைய நிலையே மாறாமல் தொடர வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம்   உத்தரவிட்டது.

1992
ராம ஜென்மபூமி-பாபர் மசூதி கட்டமைப்பு இடிக்கப்பட்டது.

Read Also | பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு: Advani, MM Joshi உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை!!

1993
ஏப்ரல் 3: பாபர் மசூதி இடிக்கப்பட்ட சில தினங்களில், மத்திய அரசு நிலத்தை கையகப்படுத்தியது சட்ட விரோதம் என்று 1993 ஜனவரியில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கத்துடன், சர்ச்சைக்குரிய வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நிலம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய 67 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியது. 'Acquisition of Certain Area at Ayodhya Act' என்ற அந்த சட்டத்தின் பல்வேறு அம்சங்களை எதிர்த்து, இஸ்மாயில் ஃபாரூக்கி (Ismail Faruqui) உட்பட பலர், பல்வேறு ரிட் மனுக்களை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

1994
வரலாற்று சிறப்புமிக்க இஸ்மாயில் ஃபாரூக்கி வழக்கில், மசூதி என்பது இஸ்லாமிய மதத்துடன் ஒருங்கிணைந்ததல்ல என்று உச்ச நீதிமன்றம் (supreme-court) தீர்ப்பளித்தது.

2003:

  • மார்ச் 13: அஸ்லம் எனப்படும் பூரே (Aslam alias Bhure) வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் மத்திய அரசு இயற்கைக்கு அப்பாற்பட்ட எந்தவொரு மத நடவடிக்கைகளும் அனுமதி கொடுக்க முடியாது என்று கூறியது.  
  • மார்ச் 14: வகுப்புவாத நல்லிணக்கத்தை பேணுவதற்காக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் உள்ள சிவில் வழக்குகள் அனைத்தும் முடியும்வரை உத்தரவிடப்பட்ட இடைக்கால உத்தரவு செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

2019 ஜனவரி
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ் கே கவுல், கே எம் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு கூறியது: “இந்த வழக்கில் மேல்முறையீட்டு விசாரணை தொடர்பாக பொருத்தமான நீதிமன்ற அமர்வு, கால அட்டவணையை இறுதி செய்யும்”. நிலத் தகராறு வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைத்தது.

Interesting Topic | நாத்திகம், மதம் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றை மனித மனம் தேடுவதற்கான காரணம் என்ன?  

2019 நவம்பர்
2019 நவம்பர் 9ஆம் தேதியன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு அயோத்தி சர்ச்சை தொடர்பான தீர்ப்பை வெளியிட்டது. தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • "அந்த இடத்தில் மசூதி இருந்தாலும், இந்துக்களின் வழிபாடு தடுக்கப்படவில்லை என சான்றுகள் நிரூபிக்கின்றன. சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்ற நம்பிக்கையை ஒருவிதத்திலும் அசைக்க முடியவில்லை. எனவே, அங்கு ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கப்படுகிறது". 
  • "இதற்காக மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை உருவாக்க வேண்டும். ராம ஜென்ம பூமி அமைப்பு அந்த அறக்கட்டளையை நிர்வகிக்க வேண்டும். ராமர் கோவில் கட்டுவதற்கான நிலத்தை ராம்லல்லா அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த நிர்வாக அமைப்பில் நிர்மோகி அஹாரா அமைப்புக்கும் ஒரு பிரதிநிதித்துவத்தை வழங்கி, அறக்கட்டளையில் சேர்த்துக் கொள்ளலாம்".
  • "புதிய மசூதி கட்டிக்கொள்ள முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும். சன்னி வக்பு வாரியம் ஒப்புக்கொள்ளும் இடத்தில் அந்த மாற்று இடத்தை கொடுக்க வேண்டும்".
  • "இந்த உத்தரவுகளை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசு மற்றும் உத்தரபிரதேச மாநில அரசுக்கு உரியது. இதற்காக 3 மாதம் அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குள் மத்திய அரசு சர்ச்சைக்குரிய இடத்தை சரி செய்து வழங்க வேண்டும்".
  • "அயோத்தி நிலம் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தையும் மத்திய அரசும், உத்தரபிரதேச மாநில அரசும் ஒருங்கிணைந்து அதிகாரிகளை நியமித்து கண்காணிக்க வேண்டும்".

அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புக்கு பிறகு, நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. அதையடுத்து கடந்த ஆகஸ்டு ஐந்தாம் தேதியன்று அயோத்தியில் ராமர் ஆலயம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 

Also Read | Photo gallery: அயோத்தி பாபர் மசூதியும், மசூதி இடிப்பு வழக்கும்...

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News