பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு: Advani, MM Joshi உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை!!

அத்வானி, ஜோஷி மற்றும் உமா பாரதி ஆகியோர் 1992 டிசம்பரில், 15 ஆம் நூற்றாண்டு மசூதி இடிக்கப்படுவதற்கு வழிவகுத்த போராட்டங்களுக்கான சதித்திட்டத்தை தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Sep 30, 2020, 02:12 PM IST
பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு: Advani, MM Joshi உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை!!

லக்னோ: பாபர் மசூதி (Babri Mosque) இடிக்கப்பட்டு கிட்டத்தட்ட இருபத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் CBI சிறப்பு நீதிமன்றம் (CBI Special Court) புதன்கிழமை (செப்டம்பர் 30, 2020) விடுவித்தது. இதில் முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி (LK Advani), முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் மற்றும் உமா பாரதி ஆகியோரும் அடங்குவர்.

சதித்திட்டம் தீட்டியதற்கான எந்த ஆதாரமும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இல்லாததால் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 1992 பாபர் மசூதி இடிக்கப்பட்டது, திட்டம் போட்டு செய்யப்பட்ட வேலை இல்லை என்றும் நீதிமன்றம் கூறியது.

அத்வானி, ஜோஷி மற்றும் உமா பாரதி (Uma Bharti) ஆகியோர் 1992 டிசம்பரில், 15 ஆம் நூற்றாண்டு மசூதி இடிக்கப்படுவதற்கு வழிவகுத்த போராட்டங்களுக்கான சதித்திட்டத்தை தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டனர். அவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொண்டனர்.

ALSO READ: 2G ஊழல் வழக்கு விசாரணையில் தில்லி உயர் நீதி மன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!!!

குற்றம் சாட்டப்பட்ட 32 பேரில் 26 பேர் நீதிமன்றத்தில் இருந்தனர். சாத்வி ரித்தம்பரா, சாக்ஷி மகாராஜ், வினய் கதியார், சம்பத் ராய் பன்சல் உள்ளிட்டோர் இதில் அடங்குவர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில், மொத்தம் 49 பேர் மீது FIR பதிவு செய்யப்பட்டது. இவர்களில் 17 பேரில் இறந்துவிட்டனர். மீதமுள்ள 32 பேர் இன்னும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு விசாரணைக் காலத்தில் உயிர் இழந்த 17 பேரில் பால் தாக்கரே, அசோக் சிங்கால், மஹந்த் அவைத்யநாத், கிரிராஜ் கிஷோர் மற்றும் விஜயராஜே சிந்தியா ஆகியோர் அடங்குவர்.

விசாரணையின் போது, ​​மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) 351 சாட்சிகளையும் 600 ஆவணங்களையும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கின், தீர்ப்பைக் கருத்தில் கொண்டு உ.பி. காவல்துறை (UP Police) முன்னதாக மாநிலம் முழுவதும் உயர் எச்சரிக்கை நிலையை அறிவித்தது. நீதிமன்றத்தை ஒட்டிய சாலைகளில் வாகன நடமாட்டம் குறைக்கப்பட்டது. நீதிமன்ற கட்டிடத்திற்கு அருகிலுள்ள பெரும்பாலான சாலைகளுக்கு அருகில் மரத் தடுப்புகள் அமைக்கப்பட்டன. அப்பகுதிகளில் நடமாட்டம் தடை செய்யப்பட்டது. மேலும் கைசர்பாக் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளின் இயக்கம் திசை திருப்பப்பட்டது.

ஆதரவாளர்கள் தடுப்புகளில் நிறுத்தப்பட்டனர். நீதிமன்ற கட்டிடத்திற்குள் ஊடக நபர்கள் அனுமதிக்கப்படவில்லை. தீர்ப்பின் அறிவிப்பைக் கருத்தில் கொண்டு நீதிமன்றங்களுக்கு அருகிலுள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. லக்னோவின் போலீஸ் கமிஷனர் சுஜீத் பாண்டேவும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தார்.

ALSO READ: டெல்லி வன்முறை: காவல்துறையின் மெத்தனமே காரணம்- உச்ச நீதிமன்றம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR