PMO, அதாவது பிரதம மந்திரியின் அலுவலகம், பிரதமர் மோடி ( PM Narendra Modi) , அமித் ஷா (Amit Shah) அவர்களின் சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2019 உடன் ஒப்பிடும்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்ள சொத்துக்களின் நிகர மதிப்பு 2020 ஆம் ஆண்டில் ரூ .36 லட்சம் அதிகரித்துள்ளது என்பதை PMO வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது


இருப்பினும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சொத்துக்களின் நிகர மதிப்பு கடந்த ஆண்டுடன் ஒப்புடுகையில் குறைந்துள்ளது.


பிரதமர் மோடியின் சொத்துக்களின் நிகர மதிப்பு 2020 ஜூன் 30 நிலவரப்படி ரூ .2.85 கோடியாக உள்ளது, அதே நேரத்தில் கடந்த ஆண்டு சொத்துக்களின் மதிப்பு ரூ .2.49 கோடியாக இருந்தது. சுமார் 3.3 லட்சம் வங்கி வைப்பு தொகை  மற்றும் 2019 ஆம் ஆண்டில் ரூ .33 லட்சம் மதிப்பில் கிடைத்த முதலீடுகளின் வருமானம் காரணமாக பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ஓரளவு அதிகரித்துள்ளன.


பிரதமர் மோடியின் கையில் ரூ .31,450 ரொக்கம் உள்ளதாகவும், வங்கி இருப்பு ரூ .3,38,173 ஆகவும், எஸ்பிஐ (SBI) காந்திநகர் என்எஸ்சி கிளையில் வங்கி வைப்பு தொகை மற்றும் எம்ஓடி இருப்பு 1,60,28,939 ரூபாயாக உள்ளது என்று பிஎம்ஓ அறிவித்தது.


பிரதமருக்கு ரூ .8,43,124 மதிப்புள்ள தேசிய சேமிப்பு சான்றிதழ்கள் (என்.எஸ்.சி), ரூ .1,50,957 மதிப்புள்ள ஆயுள் காப்பீட்டுக் பாலிஸிகள் மற்றும் ரூ .20,000 மதிப்புள்ள வரி சேமிப்பு இன்ஃப்ரா பத்திரங்கள் உள்ளன. பிரதமர் மோடி அறிவித்த அசையும் சொத்துக்கள் அதாவது மூவபிள் சொத்துக்கள் சுமார் 1.75 கோடி ரூபாய்.


ALSO READ | கேரளா தங்க கடத்தலில் தாவூத் இப்ரஹீம் கும்பலின் தொடர்பு உள்ளதா....NIA கூறுவது என்ன..!!!


பிரதமர் மோடிக்கு கடன்கள் இல்லை, அவருக்கு தனிப்பட்ட வாகனமும் இல்லை. ஏறக்குறைய 45 கிராம் எடையுள்ள நான்கு தங்க மோதிரங்களை அவர் வைத்திருக்கிறார், இதன் மதிப்பு ரூ .1.5 லட்சம். 3,531 சதுர அடி அளவிலான, ப்ளாட் நிலம் காந்திநகரில் உள்ள செக்டர் -1 இல் பிரதமர் மோடி பெயரில் ஒரு ஜாயிண்ட் சொத்து உள்ளது.


மறுபுறம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சொத்துக்களின் நிகர மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் குறைந்துள்ளது. அமித்ஷா விடம், 2020 ஜூன் மாத நிலவரப்படி 28.63 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன, அதே நேரத்தில் இது 2019 ல் 32.3 கோடி ரூபாய் அளவிற்கு இருந்தது.


13.56 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 அசையா சொத்துக்களை ஷா வைத்திருக்கிறார் என பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. மத்திய அமைச்சர் கையில் ரொக்கமாக ரூ .15,814, வங்கி இருப்பு மற்றும் காப்பீட்டில் ரூ. 1.04 கோடி, ரூ.13.47 லட்சம் மதிப்புள்ள ஓய்வூதிய பாலிசிகள், நிலையான வைப்புத் திட்டங்களில் ரூ .2.79 லட்சம் மற்றும் ரூ .44.47 லட்சம் மதிப்புள்ள நகைகள் ஆகயவை உள்ளன.


ALSO READ | சபரிமலை ஐயப்பன் கோவிலில் அக்டோபர் 16 முதல் 5 நாட்களுக்கு நடை திறப்பு..!!!


அமித் ஷா வைத்திருந்த பத்திரங்களின் சந்தை மதிப்பு வீழ்ச்சியடைந்ததால், 2020 ஆம் ஆண்டில் அவரது சொத்துக்களின் நிகர மதிப்பு குறைந்ததற்கான காரணம்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe