அக்னிபாத் திட்டத்தை எதிர்த்த வழக்குகள் டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்
Agnipath : அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முப்படைகளுக்கும் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் அக்னிபாத் என்றத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், 17.5 முதல் 21 வயதுக்குட்பட்டவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு பணியில் அமர்த்தப்படுவர். இத்திட்டத்திற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இத்திட்டத்தை உச்சநீதிமன்றத்திலும், பல்வேறு உயர்நீதிமன்றங்களிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், நீதிபதிகள் சந்திரசூட், சூர்யகாந்த் மற்றும் ஏ.எஸ் போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் படிக்க | அக்னிபாத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு... மோடி சொல்வது என்ன?
மனுதாரர்கள் விரும்பினால் தங்களது மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு மாற்றிக் கொள்ளலாம் அல்லது டெல்லி உயர்நீதிமன்றம் விசாரிக்கும் வரை காத்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக கடந்த 11-ம் தேதி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்க்கட்சிகளுக்கு விளக்கமளித்தார். இருப்பினும், அக்னிபாத் திட்டம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என எதிர்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் அல்லது நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பி விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரினர்.
மேலும் படிக்க | அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து மனுக்கள் : மத்திய அரசு கேவியட் மனு தாக்கல்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ