தில்லியில் நடைபெற்ற இந்தியா அமெரிக்கா இடையிலான 2 + 2 பேச்சுவார்த்தையில் (India USA 2+2 dialogue) பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh)  பத்திரிகையாளர் சந்திப்பின் போது இந்த தகவலை வழங்கினார். இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.கே. ஜெய்சங்கர் (S. Jaishankar)  மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ  (Mike Pompeo) மற்றும் பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் (Mark Esper) ஆகியோருடன் உரையாடினர்.


இந்தியாவும் அமெரிக்காவும் அடிப்படை பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (Basic Exchange and Cooperation Agreement - BECA) கையெழுத்திட்டன. இந்தியா சார்பாக பாதுகாப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ஜிவேஷ் நந்தன் கையெழுத்திட்டார்.  அமெரிக்காவுடன் BECA  ஒப்பந்தம் கையெழுத்தானது ஒரு 'முக்கியமான சாதனை' என்றும், இதனால், தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கான புதிய வழிகள் ஏற்படும் என்றும் கூறினார். 


'டூ பிளஸ் டூ' பேச்சுவார்த்தையில், பல முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். "அமெரிக்காவுடன் (America)  நமது இராணுவ நிலையிலான ஒத்துழைப்பு மிகச் சிறந்த முறையில் வலுவாகி வருகிறது, பாதுகாப்பு உபகரணங்களை கூட்டு இணைந்து மேம்படுத்துவது தொடர்பான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன," என்று அவர் மேலும் கூறினார்.


இரண்டு பிளஸ் டூ பேச்சுவார்த்தைகளில், இரு நாடுகளுக்கும் இடையே மிக முக்கியமான பெக்கா (BECA) ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது, இது சீனா மற்றும் பாகிஸ்தானின்பிரச்சனைகளை அதிகரிக்கும். இந்த ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்க செயற்கைக்கோள்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் இந்தியாவுடன் பகிரப்படும். இதன் மூலம், அமெரிக்காவின் முக்கியமான தகவல்தொடர்பு தரவை இந்தியா (India) பெற முடியும். இது இந்திய ஏவுகணைகளின் திறனை மேம்படுத்துவதோடு, துல்லியமாக தாக்குதல் நடத்துவதில் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின், ஆயுதப்படைகளுக்கு இடையில் விரிவான புவியியல் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவதை அனுமதிக்கிறது.


ALSO READ | இந்தியா அமெரிக்கா இடையிலான 2+2 பேச்சுவார்த்தை என்பது என்ன... எப்போது தொடங்கப்பட்டது..!!!


உலகப் பாதுகாப்பு மற்றும் அதிகரித்துவரும் பாதுகாப்பு சவால்களை உலகம் எதிர்கொண்டு வரும் நிலையில், பிராந்திய மற்றும் உலகின் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் வளத்தை உறுதி செய்வதற்கு இந்தியா-அமெரிக்க இடையிலான உறவு முன்னெப்போதையும் விட முக்கியமானது என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் கூறினார். 


இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் (S. Jaishankar),  இந்த சந்திப்பின் போது, ​​நமது அண்டை நாடுகளுடனான உறவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். 


எல்லை தாண்டிய பயங்கரவாதம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை இரு நாடுகளும் தெளிவுபடுத்தியதோடு, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதி மற்றும் வளம்ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இரு நாடுகளும் கூட்டறிக்கையில் மீண்டும் வலியுறுத்தின.


ALSO READ | சீனாவில் கடும் உணவு நெருக்கடி, விவசாய நிலத்தை பிற நாடுகளில் குத்தகைக்கு எடுக்கும் நிலை..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR