7th Pay Commission Latest News: புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி கிடைக்கும். 2022 ஜனவரியில் அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை அதிகரிக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகவிலைப்படி (Dearness Allowance) உயர்வால், ஊழியர்களின் சம்பளம் மீண்டும் அதிகரிக்கும். இருப்பினும், 2022 ஜனவரியில் அகவிலைப்படி (டிஏ உயர்வு) எவ்வளவு உயர்த்தப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், AICPI குறியீட்டின் தரவுகளின்படி, அகவிலைப்படி 3% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பணியாளர்களுக்கு புத்தாண்டில் நல்ல செய்தி கிடைக்கும்!


டிசம்பர் 2021 இறுதிக்குள் மத்திய அரசின் சில துறைகளில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். இது தவிர, 2022 ஆம் ஆண்டு பட்ஜெட்டுக்கு முன்னர், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிப்பு பற்றிய பேச்சுவார்த்தையும் உள்ளது. அது குறித்த ஒரு பெரிய முடிவு எடுக்கப்படும்.


இதுவும் நடந்துவிட்டால், ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளமும் (Basic Salary) உயரும். தற்போது, ​​அகவிலைப்படியைப் பற்றி AICPI குறியீட்டின் தரவு என்ன சொல்கிறது என்பதை இங்கே காணலாம்.


அகவிலைப்படி AICPI தரவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்


நிபுணர்களின் கூற்றுப்படி, 2022 ஜனவரியிலும் அகவிலைப்படி 3% அதிகரிக்கப்படலாம். அப்படி, 3% உயர்வு இருந்தால், மொத்த DA 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக அதிகரிக்கும்.


ALSO READ: 7th Pay Commission சூப்பர் செய்தி: மீண்டும் நல்ல செய்தி அளிக்க தயாராகும் மத்திய அரசு 


AICPI தரவுகளின்படி, செப்டம்பர் 2021 வரையிலான புள்ளிவிவரங்கள் இப்போது வெளியாகியுள்ளன. அதன்படி, அகவிலைப்படி (டிஏ) 32.81 சதவீதமாக உள்ளது. ஜூன் 2021 வரையிலான தரவுகளின்படி, ஜூலை 2021க்கான அகவிலைப்படி 31 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இப்போது அதன் மேலதிக புள்ளிவிபரங்களின்படி, அகவிலைப்படி கணக்கிடப்படும். அதில் ஒரு நல்ல அதிகரிப்பைக் காண முடியும்.


ஜூலை 2021 முதல் அகவிலைப்படி கணக்கீடு


ஜூலை 2021:  AICPI புள்ளிகள் - 353 , அகவிலைப்படி - 31.81%


ஆகஸ்ட் 2021: AICPI புள்ளிகள் - 354,  அகவிலைப்படி - 32.33%


செப்டம்பர் 2021: AICPI புள்ளிகள் - 355, அகவிலைப்படி - 32.81%  


அக்டோபர் 2021:     -                                            -


நவம்பர் 2021:           -                                           - 


டிசம்பர் 2021:           -                                            -


அகவிலைப்படியின் குறியீட்டின் கணக்கீடு     


ஜூலைக்கான கணக்கீடு - 122.8 * 2.88 = 353.664


ஆகஸ்டுக்கான கணக்கீடு - 123* 2.88 = 354.24


செப்டம்பருக்கான கணக்கீடு- 123.3 * 2.88 = 355.104


அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கும்


AICPI குறியீட்டின் தரவுகளைப் பார்த்தால், செப்டம்பர் 2021 வரை, அகவிலைப்படி 33 சதவீதத்துக்கு சாமாக உயர்ந்துள்ளது. அதாவது இதன்படி அதில் 2 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களின் புள்ளிவிவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இது மேலும் 1 சதவீதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


டிசம்பர் 2021க்குள் CPI (IW) எண்ணிக்கை 125 ஆக இருந்தால், அகவிலைப்படியில் 3 சதவீதம் அதிகரிப்பு இருப்பது உறுதி. அதாவது மொத்த அகவிலைப்படி 3% அதிகரிக்கப்பட்டு மொத்த அகவிலைப்படி 34% ஆக அதிகரிக்கும். இது ஜனவரி 2022 முதல் வழங்கப்படும். இதனால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமும் உயரும்.


ALSO READ: 7th Pay Commission: நவம்பர் மாத சம்பளத்தில் பம்பர் அதிகரிப்பு, கணக்கீடு இதோ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR