7th Pay Commission latest news: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது 31 சதவீதத்தில் அகவிலைப்படி பெறப்படுகின்றது.
ஆனால், தற்போது மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை (Fitment Factor) அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தும் வகையில் ஃபிட்மென்ட் காரணி அமல்படுத்தப்பட்டது.
ஃபிட்மென்ட் காரணி காரணமாக, மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் நேரடியாக 6000 ரூபாயில் இருந்து 18000 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஃபிட்மென்ட் காரணி 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதை 3 ஆக்க வேண்டும் என மத்திய ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த காரணி 3 ஆக இருந்தால், குறைந்தபட்ச சம்பளம் 26000 ரூபாயை எட்டியிருக்கக்கூடும்.
ஃபிட்மென்ட் காரணி மூலம் சம்பளம் தீர்மானிக்கப்படுகிறது
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை (CG Employees Salary) தீர்மானிப்பதில் ஃபிட்மென்ட் காரணி முக்கிய பங்கு வகிக்கிறது. 7வது ஊதியக் குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளின்படி, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அவர்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அலவன்ஸ்கள் தவிர ஃபிட்மென்ட் காரணி மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. இதுதான் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை இரண்டரை மடங்குக்கும் மேல் உயர்த்தும் காரணி என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: 7th Pay Commission: உயர்த்தப்பட்டது குடும்ப ஓய்வூதியத்தின் வரம்பு
ஃபிட்மென்ட் காரணி என்றால் என்ன?
7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, ஃபிட்மென்ட் காரணி 2.57 ஆகும். மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் போது, அடிப்படை சம்பளம், அகவிலைப்படி (DA), பயணப்படி (TA), வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) ஆகியவை 7வது ஊதியக் குழுவின் ஃபிட்மென்ட் காரணி 2.57ஐப் பெருக்கி கணக்கிடப்படுகிறது.
சம்பளம் ரூ.31,740 அதிகரிக்கும்
உதாரணமாக, ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் ரூ. 18,000 ஆக இருந்தால், அலவன்ஸ்கள் தவிர்த்து அவருடைய சம்பளம் 18,000 X 2.57 = ரூ.46,260 ஆக இருக்கும். இதை 3 ஆக எடுத்துக் கொண்டால் சம்பளம் 26000X3 = ரூ.78,000 ஆக இருக்கும். ஊழியர்களுக்கு இதில் பம்பர் பலன் கிடைக்கும்.
அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரித்துள்ளது
ஜனவரி முதல் ஜூன் வரை கணக்கிடப்படும் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கான பணவீக்கத்தின் சராசரியை அரசாங்கம் கணக்கிடுகிறது. இதற்குப் பிறகு, பணவீக்க சராசரி இரண்டாவது பாதியில் கணக்கிடப்படுகிறது. இதன் அடிப்படையில், அகவிலைப்படி அதிகரிப்பு முடிவு செய்யப்படுகிறது.
அகவிலைப்படி எப்போதும் சராசரி பணவீக்கத்தை விட அதிகமாக இருக்கும். ஆகஸ்ட் ஏஐசிபிஐ குறியீடு 123 புள்ளிகளில் உள்ளது. எனவே, ஜூலை 2021 வரையிலான காலத்திற்கு அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கப்பட்டது.
அகவிலைப்படி அதிகரிப்புக்குப் பிறகு, அதே அடிப்படையில் பயணப்படியும் அதிகரிக்கப்படுகிறது. DA இன் அதிகரிப்பு TA உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதேபோல், HRA மற்றும் மெடிகல் ரீமெம்பர்ஸ்மெண்டும் முடிவு செய்யப்படுகிறது. அனைத்து கொடுப்பனவுகளும் கணக்கிடப்பட்டு, பின்னர் மத்திய பணியாளர்களின் மாதாந்திர CTC நிர்ணயிக்கப்படுகிறது.
பிஎஃப், கிராச்சுட்டியின் பங்களிப்பு
அனைத்து கொடுப்பனவுகள் மற்றும் சம்பளம் இறுதி செய்யப்பட்ட பிறகு, மாதாந்திர வருங்கால வைப்பு நிதி (PF) மற்றும் கிராஜுவிட்டி பற்றி பார்க்கப்படுகின்றது. PF மற்றும் கிராஜுவிட்டி அடிப்படை சம்பளம் மற்றும் DA உடன் இணைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியரின் பிஎஃப் மற்றும் கிராஜுவிட்டி ஒரு ஃபார்முலாவால் தீர்மானிக்கப்படுகிறது. அனைத்து கொடுப்பனவுகள் மற்றும் கழிக்கப்படும் தொகைகள், CTC இலிருந்து நீக்கப்பட்ட பிறகு மத்திய அரசு ஊழியரின் வீட்டுக்கு எடுத்துச்செல்லும் சம்பளம் (take home salary) தீர்மானிக்கப்படுகிறது.
ALSO READ: 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மேலும் ஒரு அலவன்ஸ் சேரும்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR