Electric Bulb Cleaning: எலக்ட்ரிக் பல்புகளை சுத்தம் செய்வது அவசியமான ஒன்று. தற்போது தினசரி பயன்பாட்டில் எலக்ட்ரிக் பல்புகள் உள்ளன. பலரது வீடுகளிலும் டியூப் லைட்டை விட, இந்த பல்புகள் தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. நேரடியாக மின்சாரத்தில் எரியும் பல்புகளும், சார்ஜ் மூலம் எரியும் பல்புகளும் உள்ளன. பலரது வீடுகளில் இந்த பல்புகள் உயரத்தில் இருப்பதால் அடிக்கடி சுத்தம் செய்யமுடிவதில்லை. இதன் காரணமாக பல்பின் மீது அதிக தூசி படிகிறது. இதனால் அவை மிகவும் அழுக்காகவும், பின்னர் வெளிச்சத்தையும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் எலக்ட்ரிக் பல்புகளை எப்படி சுத்தம் செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள். பல்புகளை சுத்தம் செய்தால் புதியது போன்றும், அதிக வெளிச்சமும் இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்தியாவில் BMW எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... அடடே இவ்வளவு அம்சம் இருக்கா... விலை என்ன?


எலக்ட்ரிக் பல்புகளை எப்படி சுத்தம் செய்வது?


எலக்ட்ரிக் பல்புகளை என்று பார்க்கும் போது ​​பெரும்பாலான வீடுகளில் டியூப் லைட் மற்றும் பழைய கண்ணாடி பல்புகளிலிருந்து மாறி LED மற்றும் CFL பல்புகளுக்கு மாறிவிட்டனர். இந்த புதிய எலக்ட்ரிக் பல்புகள் அதிக வெளிச்சம் தருவது மட்டுமில்லாமல் நீண்ட ஆயுளையும் தருகின்றன. இதனால் ஒருமுறை வாங்கி மாட்டிவிட்டால் நீண்ட நாட்களுக்கு மாற்ற தேவையில்லை. ஆனால் அவற்றை சுத்தம் செய்வதற்கான தேவை அதிகரிக்கிறது. இருப்பினும், எலக்ட்ரிக் பல்புகளை சுத்தம் செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில் பல்ப் சேதம் ஏற்படலாம். எலக்ட்ரிக் பல்புகளை பெரும்பாலும் தூசிகள் படிந்து வெளிச்சத்தை குறைக்கும். எனவே அவற்றை அவ்வப்போது சுத்தம் செய்வது அவசியம்.


எலக்ட்ரிக் பல்புகளை சுத்தம் செய்யும் போது:


எலக்ட்ரிக் பல்புகளை சுத்தம் செய்யும் போது அத்தியாகி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவற்றை சுத்தம் செய்யும் முன் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. பல்புகளை கழட்டும் முன்பு சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். முடிந்தால் மெயின் சுவிட்சை கூட ஆப் செய்யலாம், கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது தவறில்லை. இதன் மூலம் மின் விபத்துகளை தவிர்க்கலாம்.  எலக்ட்ரிக் பல்புகள் நீண்ட நேரம் எரியும் போது அதிக சூடாக இருக்கும். எனவே அவற்றை கழட்டி சுத்தம் செய்யும் முன்பு சூடாக இருக்கிறதா என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள். மேலும் சூடான பல்புகளை சுத்தம் செய்யக்கூடாது.


பல்புகளை சுத்தம் செய்யும் போது, ​​ஹோல்டரில் இருந்து பல்பை எடுத்து சுத்தம் செய்வது நல்லது, ஏனெனில் ஹோல்டரில் இணைக்கப்பட்டிருக்கும் போது அதனை சுத்தம் செய்வது உங்களுக்கு கடினமாக இருக்கும். அதே போல, எலக்ட்ரிக் பல்பை சுத்தம் செய்ய உலர்ந்த துணி அல்லது டஸ்டர் பயன்படுத்துங்கள். ஒருபோதும் ஈரமான துணியைப் பயன்படுத்த கூடாது. சூடான பல்புகளை ஈரமான துணியால் சுத்தம் செய்தால், அது வெடிக்கக்கூடும். எலக்ட்ரிக் பல்புகளை சுத்தம் செய்த பின்பு உடனே ஹோல்டரில் மாட்டாமல் சிறிது நேரம் கழித்து மாட்டுவது நல்லது.


மேலும் படிக்க | வெளிநாடு டூர் இனி எளிது தான்... IRCTC வழங்கும் சில வெளிநாட்டு பேக்கேஜ்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ