Xiaomi 14 Civi மொபைலுக்கு பதில் இந்த 5 ஸ்மார்ட்போன்களையும் நீங்கள் வாங்கலாம்!

Xiaomi 14 Civi மொபைல் இன்று அறிமுகமானது. இது விலை உயர்ந்த மொபைல்களான Flagship வகைமையில் வரும். அந்த வகையில், இந்த மொபைலுக்கு மாற்றான இதே விலை வகைமையில் கிடைக்கும் ஐந்து மொபைல்களை இங்கு காணலாம். 

  • Jun 12, 2024, 21:19 PM IST

Xiaomi 14 Civi மொபைல் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தற்போது நீங்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

1 /8

Xiaomi 14 Civi வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது. இதனை பிளிப்கார்ட், Mi.com மற்றும் மொபைல் ஷோரூம்களிலும் வாங்கலாம், இன்று முதல் நீங்கள் முன்பதிவும் செய்யலாம். ஜூன் 19ஆம் தேதி வரை முன்பதிவு செய்பவர்களுக்கு Xiaomi Watch 3 Active இலவசமாக வழங்கப்படுகிறது.   

2 /8

Xiaomi 14 சீரிஸில் இந்த மொபைல் வருகிறது. அந்த வகையில், Xiaomi 14 Civi இரண்டு வேரியண்ட்களில் வருகிறது. 12ஜிபி+512ஜிபி வேரியண்ட் 47,999 ரூபாயாக்கும், 8ஜிபி+256ஜிபி வேரியண்ட் 42,999 ரூபாயாக்கும் விற்கப்படுகிறது.   

3 /8

அந்த வகையில், Xiaomi 14 Civi மொபைலின் விலை வகைமையிலேயே, இதே அம்சங்களை கொண்ட மற்ற நிறுவனங்களின் மொபைல்கள் என்னென்ன இருக்கின்றன என்பதை இதில் காணலாம்.   

4 /8

iQOO Neo 9 Pro 5G: இதன் விலை ரூ.36,999 ஆகும். இதில் Snapdragon 8 Gen 2 பிராஸஸர் உள்ளது. 50MP+8MP பின்புற கேமரா அமைப்பும், 16MP முன்புற கேமரா அமைப்பும் உள்ளது.   

5 /8

Samsung Galaxy S23 FE: இதன் விலை ரூ.44,999 ஆகும். மேலும், இதில் Snapdragon 8 Gen 1 சிப்செட் உடன் வருகிறது.   

6 /8

OnePlus 12R: இந்த மொபைலின் 128ஜிபி வேரியண்டின் விலை ரூ.36,182 ஆகும். இதன் பின்புற கேமரா அமைப்பு 50MP+8MP உள்ளது.   

7 /8

Oppo Reno10 Pro+: இதில் Snapdragon 8+ Gen 1 சிப்செட் உள்ளது. 50MP+64MP+8MP என மூன்று அமைப்பு கேமரா உடன் வருகிறது. பின்புற கேமரா 32MP முன்புற கேமரா உள்ளது. இதன் விலை ரூ.53,500 ஆகும்.   

8 /8

Google Pixel 8A: இதில் Tensor G3 Processor கொண்டுள்ளது. 64MP+13MP+13MP என மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதன் விலை ரூ.52 ஆயிரத்து 999 ஆகும்.