இந்தியாவில் BMW எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... அடடே இவ்வளவு அம்சம் இருக்கா... விலை என்ன?

BMW CE 04 EV Scooter: BMW Motorad நிறுவனத்தின் CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் ஜூலை 24ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Jun 23, 2024, 02:11 PM IST
  • இது 2022 டிசம்பரில் அறிமுகமானது.
  • இதில் நீங்கள் 120kph வேகத்திற்கு செல்லலாம்.
  • இதன் ரேஞ்ச் 130 கி.மீ., ஆகும்.
இந்தியாவில் BMW எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... அடடே இவ்வளவு அம்சம் இருக்கா... விலை என்ன? title=

BMW CE 04 EV Scooter: எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பது பலராலும் விரும்பப்படும் இருச்சக்கர வாகனமாக மாறிவிட்டது. சுற்றுச்சூழல் ஒருபுறம் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைப்பது ஒருபுறம் என ev ஸ்கூட்டர் விற்பனைக்கு பல காரணங்கள் உள்ளன. மேலும், EV கார்கள் போன்று EV ஸ்கூட்டர்களும் பல நிறுவனங்களாலும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பல்வேறு அம்சங்களும் உங்களுக்கு கிடைக்கிறது. 

நல்ல வரவேற்பு

OLA, Ather, TVS என உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் EV ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது. பெரியளவில் இல்லாவிட்டாலும் குறிப்பிடத்தக்க அளவில் EV ஸ்கூட்டருக்கு சந்தை இருக்கிறது. இருப்பினும் எதிர்காலத்தில் இதன் வரவேற்பு அதிகரிக்கலாம் எனும்பட்சத்தில் இப்போதே சந்தையில் பெரும்பாலான இடத்தை பிடிப்பதை நோக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த வகையில், BMW நிறுவனமும் இந்தியாவில் EV ஸ்கூட்டரை  அறிமுகப்படுத்த உள்ளது. 

ஜூலையில் அறிமுகம்

BMW Motorrad நிறுவனம் நீண்ட காலமாக சொல்லி வந்த அதன் EV ஸ்கூட்டரை வரும் ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. BMW Motorad நிறுவனத்தின் CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் நீண்ட காலமாக விற்பனைக்கு வராமல் இருந்த ஸ்கூட்டர் வரும் ஜூலை 24ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. 

மேலும் படிக்க | Mid-Range SUV: மே 2024 - விற்பனையின் டாப்பில் Mahindra... ஒரு கார் கூட விற்காத Citroen

BMW CE 04 EV Scooter: பேட்டர் ரேஞ்ச் என்ன?

BMW நிறுவனம் இதன் தொடக்க நிகழ்ச்சிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த BMW CE 04 எலெக்ட்ரிக் பைக் 8.9 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. இதனை நீங்கள் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் மொத்தம் 130 கி.மீ., வரை செல்லலாம். மேலும், இதில் நீங்கள் 0-50 கி.மீ., வேகத்திற்கு செல்வதற்கு வெறும் 2.60 வினாடிகளே எடுக்கும். இதில் நீங்கள் 120kph வேகத்திற்கு செல்லலாம்.

BMW CE 04 EV Scooter: சார்ஜிங்

மேலும், சராசரி சார்ஜரில் இதனை நீங்கள் சார்ஜ் செய்தீர்கள் என்றால் 4 மணிநேரம் 20 நிமிடங்கள் வரை எடுக்கும். அதுவே பாஸ்ட் சார்ஜிங் என்றால் 1 மணிநேரம் 14 நிமிடங்கள் ஆகும். இரும்பு பாடியை கொண்ட இந்த EV பைக், 35மி.மீ., டெலஸ்கோபிக் ஃபோர்க்கை கொண்டது. 15 இன்ச் வீல் மற்றும் 120 செக்சன் முன் டயர், 150 செக்சன் பின் டயர் கொடுக்கப்படுகிறது. சீட் உயரம் 780மி.மீ., ஆகும். இதனை நீங்கள் 800மி.மீ., வரை உயர்த்திக்கொள்ளலாம். இந்த பைக்கின் மொத்த எடை 179 கிலோவாக ஆக இருக்கும்.

BMW CE 04 EV Scooter: விலை என்ன தெரியுமா?

இதில் மூன்று வெவ்வேறு டிரைவிங் மோடுகள் உள்ளன. மேலும், வழிசொல்லுவதற்கு ப்ளூடூத் உடன் கூடிய TFT டிஸ்ப்ளே, இழுவை கட்டுப்பாடு (Traction control) ஆகியவை உள்ளது. எதிர்காலத்திற்கு ஏற்ற வகையிலும், அம்சங்களும் உள்ளன. மேலும், இதில் அறிமுக நாளை தவிர்த்து வேறு எந்த அப்டேட்டும்வரவில்லை. BMW C 400 GT மாடல் ரூ.11.20 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. அதை விட இது விலை அதிகமாகும், இரண்டு மடங்கு அதிகமாகவும் இருக்கலாம்.

மேலும் படிக்க | மே 2024: ராயல் என்பீல்டில் அதிகம் விற்பனையானது எந்த மாடல் தெரியுமா...? முழு விவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News