Income Tax: வருமான வரி தாக்கல் செய்யும்போது கவனம்... இவர்கள் 30% வரி கட்ட வேண்டும்!
Income Tax Filing: வருமான வரி தாக்கல் செய்யப்படும்போது, இரண்டு வரி முறைகளிலும் சிலர் 30 சதவீதம் வரி கட்ட வேண்டும். அதுகுறித்து இதில் காணலாம்.
Income Tax Filing: இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் வருமானத்திற்கு ஏற்ப அரசுக்கு வரி செலுத்த வேண்டும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதன் மூலம் மக்கள் தங்கள் வருமானத்தையும் வெளிப்படுத்துகின்றனர். அதே நேரத்தில், வருமான வரி கணக்கு வெவ்வேறு வருமானத்திற்கு ஏற்ப தாக்கல் செய்யப்படுகிறது. ஆனால், இப்போது சிலரின் வருமான வரியில் 30 சதவீதம் வரை கழிக்கப்பட இருக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். 2022-23 நிதியாண்டில் ஈட்டிய வருமானத்தை வெளியிட வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி, வரும் ஜூலை 31ஆம் தேதியாகும்.
வருமான வரி
குறிப்பாக, இந்தியாவில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இரண்டு அமைப்புகள் உள்ளன. இவற்றில் ஒன்று புதிய வரி முறை, மற்றொன்று பழைய வரி முறை. இரண்டு வரி முறைகளிலும் மக்கள் வெவ்வேறு வரி அடுக்குகளையும் வெவ்வேறு நன்மைகளையும் பெறுகின்றனர். அதே நேரத்தில், இந்த இரண்டு வரி அடுக்குகளிலும் அதிகபட்சமாக 30 சதவீதம் வரி செலுத்தப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட தேதிக்கு பிறகு யாராவது வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால், அவருக்கு அபராதமும் விதிக்கப்படலாம்.
மேலும் படிக்க | Income Tax Return ஜாக்பாட் செய்தி: சிபிடிடி தலைவர் அளித்த குட் நியூஸ்!!
புதிய வரி விதிப்பு
2023- 24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வரி விதிப்பின் கீழ் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன்போது, 2023-24 நிதியாண்டில், புதிய வரி விதிப்பின்படி வரி செலுத்துவோர் வரி தாக்கல் செய்ய விரும்பினால், அதிகபட்சமாக 30 சதவீத வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று அவர் கூறியிருந்தார். புதிய வரி விதிப்பின்படி, ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.15 லட்சத்துக்கு மேல் இருந்தால்தான், அவர் 30 சதவீத வருமான வரி செலுத்த வேண்டும்.
புதிய வரி விதிப்பில், இப்போது வரி அடுக்குகள் 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இப்போது 3 லட்சம் வருமானத்தில் நீங்கள் வரி செலுத்த தேவையில்லை, 3 முதல் 6 லட்சம் வருமானத்தில் 5%, 6 லட்சத்தில் இருந்து 9 லட்சம் வரை 10%, 9 லட்சத்தில் இருந்து 12 லட்சம் வரை 12% லட்சம், 12 லட்சம் முதல் 15 லட்சம் வரை 20% வரி, 15 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் 30% வரி செலுத்த வேண்டும். புதிய வரி முறையில் 50,000 வரை நிலையான விலக்கும் கிடைக்கும். இது தவிர, 7.5 லட்சம் வரை சம்பளத்தில் வரி தள்ளுபடி கிடைக்கும்.
பழைய வரி முறை
மறுபுறம், 2023-24 நிதியாண்டில், ஒருவர் பழைய வரி முறையின் கீழ் ஐடிஆர் தாக்கல் செய்தால், அவர் அதிகபட்சமாக 30 சதவீத வரியைச் செலுத்த வேண்டியிருக்கும். பழைய வரி விதிப்பின்படி, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது ஒருவரின் வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் இருந்தாலே அவர் 30% வரி செலுத்த வேண்டியிருக்கும்.
மேலும் படிக்க | ஜாக்பாட் செய்தி! இந்த ரூ.10 நோட்டு உங்ககிட்ட இருந்தா.. லட்சத்தில் லாபம் காணலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ