ஜாக்பாட் செய்தி! இந்த ரூ.10 நோட்டு உங்ககிட்ட இருந்தா.. லட்சத்தில் லாபம் காணலாம்

Old Currency: நீங்களும் உங்கள் கனவுகளை நனவாக்க விரும்பினால், பழைய நோட்டுகளை விற்று பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 3, 2023, 01:19 PM IST
  • சிறப்பம்சம் வாய்ந்த 10 ரூபாய் நோட்டு.
  • ரூபாய் நோட்டை விற்க, முதலில் E-Bay என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • இதற்குப் பிறகு, அதில் விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும்.
ஜாக்பாட் செய்தி! இந்த ரூ.10 நோட்டு உங்ககிட்ட இருந்தா.. லட்சத்தில் லாபம் காணலாம்  title=

பழைய ரூபாய் நோட்டுகள்: பணம் ஈட்டுவது மனித வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு விஷயமாகும். சிலர் கடினமாக உழைத்து பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள், சிலரோ ஒன்றும் செய்யாமல், வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்ட வழி தேடுகிறார்கள். அப்படி வீட்டில் இருந்தபடியே பணம் பெற விரும்புபவர்களுக்கான செய்தி இது.  வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்ட, உங்களிடம் சில பழைய நோட்டுகள் இருந்தால் போதும். உங்களிடம் இந்த தனித்துவமான 10 ரூபாய் நோட்டு இருந்தால், வீட்டில் இருந்தபடியே பணக்காரர் ஆகலாம். பலர் அரிதான நாணயங்கள் அல்லது ரூபாய் நோட்டுகளை வாங்குகிறார்கள். உங்களிடம் ஒரு அரிய ரூபாய் நோட்டு அல்லது நாணயம் இருந்தால், நீங்கள் கோடீஸ்வரர் ஆக வாய்ப்பு உள்ளது.

இந்த நேரத்தில் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்கும் வர்த்தகம் மிக வேகமாக நடந்து வருகிறது. இவற்றில் மக்களின் ஆர்வம் அதிகமாகி வருகின்றது. இந்த நாணயங்கள் மற்றும் நோட்டுகள் மூலம் மக்கள் பல லட்சம் ரூபாய் சம்பாதித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்களும் உங்கள் கனவுகளை நனவாக்க விரும்பினால், பழைய நோட்டுகளை விற்று பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.

சிறப்பம்சம் வாய்ந்த 10 ரூபாய் நோட்டு

உலக சந்தையில் பழைய 10 ரூபாய் நோட்டுக்கு அதிக கிராக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோட்டுக்கு மாற்றாக, 2 லட்சம் ரூபாய் வரை கிடைக்கிறது. இந்த சிறப்பு 10 ரூபாய் நோட்டை உங்கள் வீட்டில் எங்கேனும் வைத்திருந்தால், வீட்டில் இருந்தபடியே நீங்கள் 2 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம். இந்த 10 ரூபாய் நோட்டின் சில சிறப்புகள் உள்ளன. இவற்றை மனதில் கொள்ளவேண்டியது மிக அவசியமாகும். 

ரூ.10 நோட்டின் அம்சங்கள்

இந்த நேரத்தில், நாட்டில் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் பல வலைத்தளங்கள் உள்ளன. ஆனால் இந்த நோட்டுகளில் சில சிறப்பு அம்சங்கள் இருப்பதால், இணையதளத்தில் இருந்து நோட்டை வாங்குவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். உதாரணமாக, 10 ரூபாய் நோட்டைப் பற்றி பேசினால், இந்த 10 ரூபாய் நோட்டில் அசோகர் தூண் இருக்கும். கூடுதலாக, இது 1943 இல் வெளியிடப்பட்டது. இதனுடன், கவர்னர் சி.டி.தேஷ்முக்கின் கையெழுத்தும் இந்த நோட்டில் காணப்படும். நோட்டின் மறுபுறம் ஒரு படகின் படம் இருக்கும். இந்த அம்சங்கள் அனைத்தும் உங்களிடம் உள்ள நோட்டில் இருந்தால்,  இந்த நோட்டுக்கு ஈடாக 2 லட்சம் ரூபாய் பெறலாம். இதுமட்டுமின்றி சில சிறப்பம்சம் வாய்ந்த 5, 50 ரூபாய் நோட்டுகள் மற்றும் 2,5 ரூபாய் நாணயங்கள் மூலமாகவும் லட்சக்கணக்கில் பணம் ஈட்டலாம். 

மேலும் படிக்க | Income Tax Return ஜாக்பாட் செய்தி: சிபிடிடி தலைவர் அளித்த குட் நியூஸ்!!

ரூபாய் நோட்டை எப்படி விற்பது?

- ரூபாய் நோட்டை விற்க, முதலில் E-Bay என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 

- இதற்குப் பிறகு, அதில் விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும்.

- இதன் பிறகு, ரூபாய் நோட்டின் இருபுறமும் உள்ள புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

- இதற்குப் பிறகு, இந்த இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு ரூபாய் நோட்டின் விளம்பரம் அனுப்பப்படும்.

- யாராவது இந்த ரூபாய் நோட்டை வாங்க ஆர்வமாக இருந்தால், அவர் உங்களை நேரடியாக தொடர்புகொள்வார்.

- தொடர்பு கொண்ட பிறகு, உங்களுக்குள் தீர்மானிக்கப்படும் விலையில் இந்த ரூபாய் நோட்டை நீங்கள் விற்லகலாம். 

இந்த வகையில் உங்கள் பழைய ரூபாய் நோட்டு, வீட்டில் இருந்தபடியே உங்களுக்கு லாபத்தை ஈட்டிக்கொடுக்கும். 

ஆகஸ்ட் 2020 இல், இந்திய ரிசர்வ் வங்கி (RBI), கரன்சி நோட்டுகள் மற்றும் நாணயங்கள் ஆன்லைனில் வாங்கப்படுவது மற்றும் விற்கப்படுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த அறிக்கையில், “ரிசர்வ் வங்கியின் பெயர்/லோகோவைப் பயன்படுத்தி,  பல்வேறு ஆன்லைன்/ ஆஃப்லைன் தளங்களில் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களின் வாங்குதல் மற்றும் விற்பது தொடர்பான பரிவர்த்தனைகளில், பொதுமக்களிடம் இருந்து கட்டணங்கள்/கமிஷன்/வரி என சில தனிமங்கள் மோசடியில் ஈடுபடுவது இந்திய ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்துள்ளது." என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

ஆகையால் ஆன்லைனில் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை வாங்கும் / விற்கும் போது பொது மக்கள் அதிகபட்ச கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

(பொறுப்புத் துறப்பு: ஜீ தமிழ் நியூஸ் பழைய நாணயங்கள் அல்லது வங்கி நோட்டுகளை ஆன்லைனில் வாங்குவதையும் விற்பதையும் ஊக்குவிக்கவில்லை. இந்த செய்தி வெறும் தகவலுக்காக மட்டுமே பகிரப்பட்டுள்ளது)

மேலும் படிக்க | மூத்த குடிமக்கள் கவனத்திற்கு... இந்த 3 வங்கிகளில் FD வட்டி விகிதம் அதிகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News