மதியம் தூங்கும் பழக்கத்தை கொண்டிருப்பவரா நீங்கள்? இந்த பழக்கத்தை பலர் தீயது என்று கூறுவதுண்டு. ஆனால், ஒரு சிலர் இதனை நல்ல பழக்கம் என்றும், இதனால் மன நலம் மேம்படும் என்றும் கூறுகின்றனர். இது உண்மையா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதியத்தில் குட்டி தூக்கம்..!


காலையில் எழுந்தவுடன் பலர் விழிப்புடனும் துடிப்புடனும் செயல்படுவர். ஆனால், ஒரு சிலருக்கோ காலையில் எழுந்தவுடன் அத்தனை சோர்வாக இருக்கும். விழிப்புடன் இருக்கும் ஆட்களுக்கும் சரி, எப்போதும் சோர்வுடன் இருக்கும் ஆட்களுக்கும் சரி மதியம் சாப்பிட்டவுடன் கண்டிப்பாக தூக்கம் கண்களை சொருகும். ஒரு சிலருக்கு இந்த மதிய தூக்கத்தினால் உடல் எடை ஏறிவிடுமோ என்ற பயம் இருக்கும். அதனால் தூக்கத்தை சமாளித்துக்கொள்வர். ஒரு சிலர் அப்படியே கண் அயர்ந்து விடுவர். இது உண்மையில் உடலுக்கு நல்லது என சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. 


மதிய தூக்கத்தால் ஏற்படும் பலன்கள்:


>இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதிக ரத்த அழுத்தம் கொண்டுள்ளவர்களின் உடல் நலனுக்கு நல்லது. ஏற்கனவே இதயத்தில் அறுவை சிகிச்சை செய்துள்ளவர்கள், மதியத்தில் தூங்கினால் அவர்களுக்கும் நல்லது. 


>ஹார்மோன்ஸ்களை பாலன்ஸ் செய்யும். PCOD, தைராய்டு, சர்க்கரை நோய் போன்ற ஹார்மோன் குறைபாடுகளை கொண்டுள்ளவர்களுக்கு நல்லது. 


>செரிமான கோளாறுகளை கட்டுக்குள் வைக்கும் என்று கூறப்படுகிறது. 


>உடல் சோர்வை தவிர்க்க உதவும். 


>மதிய வேளையில் அளவுடன் தூங்குவது நினைவாற்றலை அதிகரிக்கும் என ஒரு சில ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தூக்கத்தால், நாம் ஒரு நாளில் நடக்கும் பல விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியுமாம். 


>வயதைப்பொருத்து மதிய வேளையில் தூங்குவதையும் மாற்றிக்கொள்ள வேண்டும். 


மேலும் படிக்க | இரவில் போதுமான தூக்கம் இல்லாவிட்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா?


எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்? எப்படி தூங்க வேண்டும்?


>சாப்பிட்டவுடன் தூங்கலாம்.


>ஒருக்களித்தவாறு தூங்க வேண்டும்


>10 முதல் 30 நிமிடங்கள் வரை தூங்கலாம்.


>1-3 மணிக்குள்ளாக தூங்கலாம். 


என்னென்ன செய்யக்கூடாது?


>4-7 மணிக்குள் தூங்க கூடாது. அப்படி செய்வதால் இரவு தூக்கம் கெட்டு விடும். 


>மதியம் தூங்கும் நாட்களில் டீ, காபி, சிகரெட், சாக்லேட், போன்றவற்றை எடுத்துக்கொள்ள கூடாது. 


>30 நிமிடங்கள் கடந்து தூங்குவதை தவிர்க்கவும்


எவ்வளவு நேரம் தூங்கினால் ஆபத்து..?


மதிய நேர தூக்கத்தில் பல பின்விளைவுகள் இருக்கிறது. உடல் சோர்வுற்று கண்டிப்பாக தூக்கம் தேவை என தோன்றினால் சில நிமிடங்கள் தூங்கி கொள்ளலாம். ஆனால், எந்த தூக்கமு 30 நிமிடங்களுக்கு மேல் இருக்க கூடாது. இதனால், இரவில் தூக்கம் இல்லாமல் போவது, ரத்த அழுத்தம் அதிகரிப்பது, உடல் எடை அதிகரிப்பது போன்ற பிரச்சனைகள் உருவாகும். 


மேலும் படிக்க | அடிக்கடி தூக்கம் வருகிறதா? அலட்சியம் வேண்டாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ