டிஏ உயர்வு சமீபத்திய செய்திகள்: மத்திய அரசு ஊழியர்கள் தொடர்ந்து பல நல்ல செய்திகளை பெற்று வருகிறார்கள். ஜனவரி மாதம் அவர்களது அகவிலைபப்டி அதிகரிகப்பட்ட நிலையில், தற்போது ஆண்டின் இரண்டாவது அதிகரிப்பு, அதாவது ஜூலை மாதம் ஏற்படவுள்ள அதிகரிப்பும் 4 சதவிகிதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது தவிர, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் பல மாநிலங்களும் தங்கள் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை அதிகரித்து வருகின்றன. இதுமட்டுமின்றி, பல மாநிலங்களில் பழைய ஒய்வூதியத் திட்டமும் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரிசையில், இமாச்சலப் பிரதேச அரசு மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முன்னாள் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (டிஏ) உயர்த்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர்தான் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து மாநில அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். இதைத் தொடர்ந்து தற்போது அகவிலைபப்டியும் அதிகரிக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு இரட்டை மகிழ்ச்சியை அளித்துள்ளது. 


ஏப்ரல் 15 அன்று ஹிமாச்சல் தினத்தன்று மாநில அளவிலான விழாவில் அகவிலைப்படியை அதிகரிப்பதற்கான அறிவிப்பை முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு வெளியிட்டார். மேலும் மாநில அரசு இப்போது அது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வால் 2.15 லட்சம் ஊழியர்கள் மற்றும் 90,000 ஓய்வூதியதாரர்கள்  உட்பட 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பயனடைவார்கள்.


இதற்கு முன், இமாச்சலப் பிரதேச அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 31 சதவிகித அகவிலைப்படியை பெற்றனர். இப்போது தகுதியுடைய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் 34 சதவிகிதம் உயர்த்தப்பட்ட விகிதத்தில் பலனைப் பெறத் தொடங்குவார்கள். அவர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகையும் வழங்கப்படும். இந்த அதிகரிப்பின் மூலம் அரசின் கருவூலத்தில், 500 கோடி ரூபாய் சுமை அதிகரிக்கும் என, மாநில அரசு மதிப்பிட்டுள்ளது.


மேலும் படிக்க | 7th Pay Commission ஜாக்பாட் செய்தி: ஊழியர்களுக்கு 2 பெரிய பரிசுகள்


ஏப்ரல் 2023 க்குப் பிறகான கொடுப்பனவுகள் ரொக்கமாக வழங்கப்படும் என்றும், ஜனவரி 2022 முதல் மார்ச் 31 2023 வரையிலான நிலுவைத் தொகை பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் மாநில தலைமைச் செயலாளரின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி 1, 2022க்குப் பிறகு, ஓய்வுபெற்ற பணியாளர்கள் தங்களின் அகவிலைப்படியைப் பணமாகப் பெறுவார்கள்.


2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பழைய ஓய்வூதியத் திட்டத்தையும் மாநில அரசு மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வராத 1.36 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான முடிவு ஜனவரி 13, 2023 அன்று எடுக்கப்பட்டது, அதன் அறிவிப்பு ஏப்ரல் 17, 2023 அன்று வெளியிடப்பட்டது.


மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி:


மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்கிறது. இது ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஜனவரி-பிப்ரவரிக்குப் பிறகு, இப்போது தொழிலாளர் அமைச்சகம் மார்ச் மாதத்திற்கான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏஐசிபிஐ மதிப்பீட்டு எண் 132.7 லிருந்து 133.3 ஆக உயர்ந்துள்ளது. 


இந்த எண் அதிகரித்துள்ளதால், அகவிலைப்படியும் 4 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  அதாவது தற்போதைய 42 சதவீதத்திலிருந்து ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதமாக அதிகரிக்கும். 


மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை 1 முதல் ஊழியர்களின் சம்பளம் 4% வரை உயர வாய்ப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ