நிழல் கிரகமான ராகு இன்று அதாவது மார்ச் 17ம் தேதி தனது ராசியை மாற்றி மேஷ ராசிக்குள் நுழைந்துள்ளார். 18 மாதங்களுக்குப் பிறகு ராகு பெயர்ச்சி நடந்துள்ளது. சனிக்கு அடுத்தபடியாக மெதுவாக நகரும் கிரகம் ராகு ஆகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராகுவும் கேதுவும் எப்போதும் தலைகீழாகச் செல்லும் கிரகங்கள். ராகு ரிஷப ராசியை விட்டு மேஷ ராசிக்குள் நுழைகிறார். இந்த முறை ராகு ஹோலிகா தகன நாளில் தனது ராசியை மாற்றுகிறார். எந்த ராசிக்காரர்களுக்கு ராகுவின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக அமையப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 


மிதுனம்
ராகுவின் சஞ்சாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு வருமானத்தை அதிகரிக்கும். இது மிதுன ராசிக்காரர்களின் நிதி நிலையை பலப்படுத்தும். பண வரவு சாதகமாக இருக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் அதிக லாபம் காணலாம்.


கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு ராகுவின் ராசி மாற்றம் பல அதிர்ஷ்டங்களை அள்ளித் தரும். கடக ராசிக்காரர்கள் இப்போது எதைச் செய்தாலும் அதில் வெற்றி பெறுவார்கள். தொழில்-வியாபாரத்திற்கு இது நல்ல நேரமாக அமையும். பண வரவு சாதகமாக இருக்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். இந்த பயணம் லாபகரமானதாக அமையும். 


மேலும் படிக்க | சனி பெயர்ச்சி 2022: இந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம், நினைத்தது நடக்கும் 


விருச்சிகம்


மேஷ ராசியில் ராகுவின் பிரவேசம் விருச்சிக ராசிக்காரர்களுக்குப் பெரிய பலன்களைத் தரும். பணியிடத்தில் பதவி உயர்வு பெறலாம். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். விருச்சிக ராசிக்காரர்கள் அதிக பணம் ஈட்டக்கூடிய நேரம் இது. புதிய தொழில் தொடங்கும் எண்ணம் உள்ளவர்கள் அதை இப்போது செய்யலாம். 


கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ராகுவின் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். வேலை மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பதவி உயர்வு கிடைக்கும். நீங்கள் பெரிய சாதனைகளை செய்வீர்கள். திடீர் பண ஆதாயம் உண்டாகும். தடைப்பட்ட பணம் வருவதற்கான முழு வாய்ப்புகள் உள்ளன.


 மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ராகுவின் சஞ்சாரம் நன்மை தரும். அவர்களின் வருமானமும் கூடும். திடீரென்று மீன ராசிக்காரர்களுக்கு பல இடங்களிலிருந்து பணம் வரக்கூடும். வெறும் பேச்சின் மூலமே பெரிய பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் பணி பாராட்டப்படும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகம்! கேதார யோகத்தால் சிக்கலை சந்திக்கும் ராசி 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR