ஹூண்டாய் அறிமுகப்படுத்தியது க்ரெட்டா SUV புதிய மாடல் கார்
ஹூண்டாய் நிறுவனம் க்ரெட்டா எஸ்யூவியின் புதிய பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது, தொடக்கவிலை 13.51 லட்சம் ரூபாய் மட்டுமே...
ஹூண்டாய் நிறுவனம் க்ரெட்டா எஸ்யூவியின் புதிய பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் டெலிவரி விலை 13.51 லட்சம் ரூபாயில் தொடங்குகிறது
ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி நைட் எடிஷனுடன் நான்கு வெவ்வேறு வேரியண்ட்கள் கிடைக்கின்றன. புதிய மாடல் கார்களில் பெட்ரோலில் இயங்கும் என்ஜின்களுடன் இரண்டு வகைகள் கிடைக்கின்றன, மற்ற இரண்டு வகைகளும் டீசல் பவர்டிரெய்னுடன் வருகின்றன.
ஹூண்டாய் க்ரெட்டா நைட் பதிப்பு 1.5 பெட்ரோல் S+ 6எம்.டி: ரூ. 13.51 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
ஹூண்டாய் க்ரெட்டா நைட் பதிப்பு 1.5 பெட்ரோல் எஸ்.எக்ஸ்(ஓ) ஐ.வி.டி: ரூ 17.22 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
ஹூண்டாய் க்ரெட்டா நைட் பதிப்பு 1.5 டீசல் S+ 6எம்.டி: ரூ. 14.47 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
ஹூண்டாய் க்ரெட்டா நைட் பதிப்பு 1.5 டீசல் எஸ்.எக்ஸ்(ஓ) 6AT: ரூ 18.18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
மேலும் படிக்க | 2022ம் ஆண்டின் சிறந்த தொழில்நுட்பக் கார்கள்! Glanza முதல் BMW iX Flow வரை
ஹூண்டாய் க்ரெட்டா நைட் பதிப்பில் புதிதாக ஏதாவது வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதா?
க்ரெட்டா டார்க் நைட் என்ற பெயருக்கு ஏற்ப இந்த கார் கருப்பு நிறத்தில் வெளிவருகிறது.
வெளிப்புறம்
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட காரின் குறிப்பிடத்தக்க மாற்றம் என்றால், முன்புறம் இருக்கும் கிரில் ஆகும். புதிய நைட் எடிஷன் க்ரெட்டா டி-குரோம் செய்யப்பட்ட கிரில் உடன் வருகிறது. கிரில் முழுவதும் கிடைமட்டமாக ஓடும் சிவப்பு நிற பட்டையும் உள்ளது.
இந்த புதியக் காரில் கருப்பு நிற தீம் இருப்பதால் பார்க்கும் இடமெல்லாம் கருமையே விரவியுள்ளது. கருப்பாக இருந்தாலும், காரின் கவர்ச்சியை மேலும் அதிகரிக்கும் வகையில் முன் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்கள் இரண்டிலும் பியானோ பிளாக் ஃபினிஷ் பயன்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | குறைந்த விலையில் Ola S1 Pro வாங்க இதுவே கடைசி வாய்ப்பு
சி-பில்லர், ரூஃப் ரெயில்கள் மற்றும் ORVMகள் ஆகியவற்றிலும் பளபளப்பான கருப்பு பூச்சு பயன்படுத்தப்பட்டுள்ளது. பிற இடங்களில் நைட் தீமுடன் செல்லும் வகையில் டெயில் விளக்குகளுக்கு ஸ்மோக்டு எஃபெக்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் S+ வேரியண்ட் காருக்கு 16-இன்ச் கருப்பு அலாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது, SX(O) 17-இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஹூண்டாய் முன் டயர்களுக்கு சிவப்பு பிரேக் காலிப்பர்களைப் பயன்படுத்தியுள்ளது.
உட்புறம்
புதிய வேரியண்டின் உட்புறங்களில் அதிக வித்தியாசம் இல்லை. உள்ளேயும் பழைய மாடலின் டிசைனே இருக்கிறது. டாஷ்போர்டு மட்டும் முழு கருப்பு நிறத்தில் உள்ளது. ஆனால், ஏசி வென்ட் வண்னம் மட்டும் மாறுபடுகிறது. ஸ்டீயரிங் வீல் மற்றும் கார் இருக்கைகளின் தையல்களிலும் வண்ணக் கோடு இருப்பது கருப்புக்கு மேலும் மெருகூட்டுகிறது.
எஞ்சின்
புதிய நைட் எடிஷன் க்ரெட்டா எஸ்.யூ.வியின் எஞ்சின், இதன் பழைய மாடல்களில் இருப்பதைப் போலவே இருக்கும். 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 113 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
1.5-லிட்டர் டீசல் எஞ்சின் அதே அளவு பவரை 113Nm இல் வெளியிடுகிறது ஆனால் முறுக்குவிசை 250Nm இல் அதிகமாக இருக்கும். இந்த எஞ்சின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது.
மேலும் படிக்க | காற்றை விலைபேச வரும் ஹூண்டாய் MPV
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR