வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. அதன்படி தற்போது வங்கி தொடர்பான பணிகளை முடிக்க வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 1 மணிநேரம் கிடைக்கும். ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பின் படி, இன்று முதல் (ஏப்ரல் 18, 2022) வங்கிக்கான நேரத்தை மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது. தொடர்ந்து 4 நாட்கள் வங்கி மூடப்பட்ட பிறகு, ஏப்ரல் 18, 2022 முதல் வங்கிகள் திறக்கும் நேரத்தை ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. அதன்படி தற்போது திங்கள்கிழமை (இன்று) முதல் காலை 9 மணிக்கே வங்கிகள் திறக்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிசர்வ் வங்கி புதிய முறையை அமல்படுத்தியது
இதற்கிடையில் வங்கிகள் மூடப்படும் நேரத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி, இந்த ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை சந்தைகளின் வர்த்தக நேரம் காலை 9:00 மணி முதல் மாலை 3:30 மணி வரை இருக்கும். தற்போது கோவிட்-19 கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டதன் பின் இந்த முடிவை எடுத்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 



மேலும் படிக்க | UPI Payment Mistakes:இதை செய்யத் தவறினால் உங்கள் கணக்கு காலியாகிவிடும்


சந்தைகளில் வர்த்தக நேரமும் மாறியது
மாற்றப்பட்ட நேரத்திற்கு ஏற்ப அந்நியச் செலாவணி சந்தை மற்றும் அரசுப் பத்திரங்களில் பரிவர்த்தனைகள் செய்ய முடியும் என்றும் ரிசர்வ் வங்கி தனது வெளியீட்டில் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 18, 2022 முதல், ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறைச் சந்தைகளான அந்நியச் செலாவணி இந்திய ரூபாய் வர்த்தகம், ஃபாரெக்ஸ் டெரிவேடிவ்கள், ரூபாய் வட்டி விகித டெரிவேடிவ்கள், கார்ப்பரேட் பத்திரங்களில் ரெப்போ போன்றவற்றின் வர்த்தகங்களை, கோவிட் தொற்று நோய்க்கு பின், முந்தைய நேரங்களிலேயே அதாவது காலையில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது
முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி ஏப்ரல் 7 ஆம் தேதி சந்தையின் வர்த்தக நேரத்தை மாற்றியது. சந்தை நேரங்கள் காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை மாற்றப்பட்டு, வர்த்தக நேரம் அரை மணி நேரம் குறைக்கப்பட்டது. அதன்பிறகு, செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டு, நவம்பர் 9, 2020 முதல் வர்த்தக நேரம் ஓரளவு திரும்பியது. இந்த நிலையில், நீண்ட மாதங்களுக்கு பிறகு மீண்டும் பழைய நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு ஷாக்: விவரம் இதோ 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!