மத்திய பிரதேசத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் தினமும் பள்ளிக்கு குதிரையில் செல்லும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகளாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் (Social Media) மூலம் நம்மிடம் வந்து சேர்கிறது. அந்தவகையில், தினமும் குதிரையில் (Horse) பள்ளிக்கு செல்லும் ஒரு மாணவரின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 


கொரோனா தொற்று காரணமாக கடந்த 11 மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. எந்தவகையிலும் மாணவர்களின்  கல்வி தடைபடக்கூடாது என்ற நோக்கில் ஆன்லைன் (Online Class) மூலம் மானவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தாலும் கொரோனா (Coronavirus) அச்சத்தால் மாணவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்ப பயப்படுகிறார்கள். இந்நிலையில், மத்திய பிரதேசத்தை (Madhya Pradesh) சேர்ந்த மாணவர் ஒருவர் தினமும் பள்ளிக்கு குதிரையில் செல்லும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பஸ் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் இல்லாததால், சிவராஜ் (Shivraj), குதிரையில் பள்ளிக்கு செல்ல, சிவராஜூக்கு அவரது தந்தை அனுமதி அளித்துள்ளார். 



ALSO RAED | Viral Video: போட்டோகிராஃபரை வெளுத்துவாங்கிய மாப்பிள்ளை.. எதற்கு தெரியுமா?


மத்திய பிரதேச மாநிலம் காந்த்வா (Khandwa) பகுதியில் விவசாயி தேவ்ராம் யாதவின் மகன் சிவராஜ். இவன் அவனது கிராமத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளிக்கு செல்ல பஸ் வசதி இல்லாததால், தன் வீட்டில் உள்ள குதிரையில் பள்ளி சென்று வருகிறான். இந்த போட்டோக்கள், இணையவெளியில் வைரலாக பரவி (Viral) வருகின்றன. சிவராஜ், சைக்கிளில் பள்ளிக்கு சென்ற நிலையில், சாலைகள் சரியாக இல்லாத காரணத்தினால், அவனுக்கு அதிகளவில் அடிபட்டது. குதிரையில் செல்ல, சிவராஜிற்கு, தந்தை தேவராஜ் (Devram Yadav) அனுமதி அளித்தார்.



எத்தகைய தடைகள் வந்தாலும், அதைகளை தாண்டி படிக்க வேண்டும் என்று உத்வேகம் கொண்டுள்ள சிவராஜை, மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பாராட்டியுள்ளார். அவனது பள்ளி ஆசிரியர்களும் பாராட்டியுள்ளனர். சிவராஜிக்கு உதவி செய்யும் வகையில், குதிரையை, தங்களது பள்ளி வளாகத்திலேயே நிறுத்திக்கொள்ள, பள்ளி நிர்வாகம் லாடம் கட்டித் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR