கன்னித்தன்மை பரிசோதனை இனி இல்லை Pakistan உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பாலியல் வன்கொடுமைகளில் தப்பிப் பிழைத்தவர்களின் `கன்னித்தன்மை பரிசோதனை` செய்யப்படுவதை பாகிஸ்தான் தடைசெய்தது
பாகிஸ்தானின் லாகூர் உயர்நீதிமன்றம் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளானவர்களுக்கு கன்னித்தன்மை சோதனை செய்யப்படுவது சட்டவிரோதமானது என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அறிவித்துள்ளது.
இந்த நடைமுறை "மருத்துவ அடிப்படை கொண்டதில்லை" என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் சுயமரியாதையையும், மனதையும் புண்படுத்துகிறது, எனவே அது வாழும் உரிமைக்கு எதிரானது, எனவே கண்ணியத்திற்கான உரிமை என்பதன் அடிப்படையில் இந்த தீர்ப்பு வெளியிடப்படுகிறது" என்றும் லாகூர் நீதிமன்றம் (High Court) அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இன்றுவரை, பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளானவர்களுக்கு கன்னித்தன்மை சோதனை செய்யப்படுகிறது. பெண்ணுறுப்பு இந்த சோதனையில் பரிசோதிக்கப்படும். இது இரண்டு விதங்களில் செய்யப்படும்.
Also Read | Kim Jong Un: கொரோனாவே இல்லைன்னா.. தடுப்பூசி எதுக்கு பாஸ்.. சொல்லுங்க..!!
ஹைமன் என்று சொல்லக்கூடிய பெண்ணுறுப்பின் தொடக்கத்தில் இருக்கும் மெல்லிய சவ்வு போன்ற திசு பகுதியை ஆய்வு செய்வார்கள். இந்த மெல்லிய சவ்வு கிழிந்திருந்தால், அந்த பெண் கன்னித்தன்மை இழந்தவள் என்று முடிவு செய்வார்கள். அடுத்த முறையில், மருத்துவர் இரண்டு விரல்களை பெண்ணின் பிறப்பு உறுப்புக்குள் செருகி பரிசோதனை செய்வார்கள். இந்த இரண்டு முறைகளின் மூலம், வெளிப்படையாக, ஒரு பெண் கன்னித்தன்மை கொண்டவரா இல்லையா என்பதை தீர்மானிக்கின்றனர்.
உலகெங்கிலும் உள்ள ஒரு சில நாடுகளில், குறிப்பாக பாகிஸ்தானில் இந்த சோதனை ஒரு பொதுவான நடைமுறையாகும், அங்கு ஒரு பெண்ணின் "மரியாதை அல்லது நல்லொழுக்கத்தை" மதிப்பிடுவதற்காக சோதனை நடத்தப்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பு (World Health Organization) தெரிவித்துள்ளது.
Also Read | Coronavirus தடுப்பூசியால் பாதுகாக்கப்படும் முதல் பசிபிக் நாடு எது தெரியுமா?
தற்போது இந்த நடைமுறை சட்டவிரோதமானது என்று லாகூர் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பெண்ணுரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், வக்கீல்கள் மற்றும் தேசிய சட்டமன்ற உறுப்பினர் என பலர் 2020 ஜூன் மாதம் இரண்டு மனுக்களை தாக்கல் செய்தனர். அதில், கன்னித்தன்மை பரிசோதனை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
பாகிஸ்தானின் (Pakistan) மனித உரிமைகள் அமைச்சர் ஷிரீன் மசாரி (Shireen Mazari) நீதிபதி மாலிக்க்கு டிவிட்டர் செய்தி மூலம் நன்றி தெரிவித்தார். இந்த முடிவு "இழிவான மற்றும் அபத்தமான" இரண்டு விரல் சோதனைக்கு எதிரான ஒரு தைரியமான மற்றும் தெளிவான தீர்ப்பாகும்" என்றார்.
மனுதாரர்கள் மற்றும் பெண்ணுரிமை குழுக்கள் லாகூர் உயர்நீதிமன்றத்தின் முடிவைப் பாராட்டியதுடன், இந்த முடிவு பொதுவாக பெண்களின் உரிமைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர்.
இந்த கன்னித்தன்மை பரிசோதனை ’அறிவியல் அடிப்படையற்றது, பெண்களை இழிவுபடுத்துவது’ என்று மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஆயிஷா மாலிக், "பாலியல் வன்முறை வழக்குகளில் தடயவியல் மதிப்பு இல்லை" என்றும், சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வ வாய்வழி வழிகாட்டுதல் உடனடியாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய உத்தரவுகளை பிறப்பிக்கும்படி கேட்டுக்கொண்டார். கன்னித்தன்மை சோதனைகள் பெண்களுக்கு எதிரான பாகுபாடு காட்டப்படுவதற்கான வெளிப்படையான உதாரணம்’ என்று தெரிவித்தார்.
Also Read | Google-ல் employee union: திடீரென தொழிற்சங்கம் முளைத்தன் காரணம் என்ன?
"கன்னித்தன்மை சோதனை மிகவும் அவமானகரமானது, விஞ்ஞான அல்லது மருத்துவத் தேவை இல்லாதது, ஆனால் பாலியல் வன்முறை வழக்குகளில் மருத்துவ நெறிமுறைகள் என்ற பெயரில் மேற்கொள்ளப்படுகிறது. இது பெண்களை அவமதிக்கும் நடைமுறையாகும், இது குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பான விஷயத்தை மாற்றி, பாதிக்கப்பட்டவரின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதற்குப் பயன்படுகிறது" என்று நீதிபதி மாலிக் கூறியிருப்பது அதிகாரப்பூர்வ நீதிமன்ற ஆவணங்களில் பதிவாகியுள்ளது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR