COVID-19 பரவல் எங்கள் நாட்டில் இல்லவே இல்லை என சத்தியம் செய்யாத குறையாக, வட கொரியா இத்தனை நாள் கூறிவந்தது.
இந்நிலையில், தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகளுக்கான உலகளாவிய கூட்டணியிடம் (Global Alliance for Vaccines and Immunizations- GAVI) இப்போது தடுப்பூசி வேண்டும் என வட கொரியா விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது.
GAVI-ன் செய்தித் தொடர்பாளர் வட கொரியாவின் (North Korea) விண்ணப்பம் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் குழு தற்போது தனிப்பட்ட வகையில் நாடுகள் வைத்துள்ள கோரிக்கைகளை மதிப்பீடு செய்து வருகிறது என்றும், குழு இது குறித்த விரிவான தகவல்களை விரைவில் வழங்கும் என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு வழங்கும் உதவியை பெற தகுதியான 92 நாடுகளில் 86 நாடுகளில் விண்ணப்பங்களை சமர்பித்துள்ளதாக GAVI முன்பு கூறியது. உதவி பெற தகுதியான நாடுகளில் வடகொரியாவும் உள்ளது.
வட கொரியாவில் கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்று பாதிப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என அதிகார்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் டிசம்பர் 17 வரை கிட்டத்தட்ட 12,000 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் பல்லாயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பை மேற்கோளிட்டு செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது
டிசம்பர் பிற்பகுதியில் இருந்து, வட கொரிய அதிகாரிகள் நோய் பரவாமல் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Jack Ma: மாயமான அலிபாபா நிறுவனர் ஜாக் மாவை சீனா அரசு என்ன செய்தது?
ரஷ்யாவின் (Russia) ஸ்பூட்னிக் வி கொரோனா வைரஸ் தடுப்பூசி மற்றும் தெர்மோகிராஃப்கள் உள்ளிட்ட சீனாவின் பரிசோதனை கருவிகளையும் வட கொரியா வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், வட கொரிய சர்வாதிகாரி தலைவர் கிம் ஜாங் உன் (Kim Jong-Un) நாட்டின் குடிமக்களுக்கு புது விதமாக வாழ்த்துக்களை தெரிவித்தது அனைவரையும் ஆச்சர்யபடுத்தியது. ஏனென்றால் அவரது ஆளுமைக்கு இது முற்றிலும் மாறுபட்ட ஒரு செயலாகும்.
பொருளாதார முன்னேற்றம் குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்காகவும், சர்வதேச தடைகள் மற்றும் கொரோனா வைரஸ் வெடிப்பைத் தடுக்கும் நோக்கில் கடுமையான நடவடிக்கைகளின் விளைவாக குடிமக்கள் தாங்கிக் கொண்ட கஷ்டங்களுக்காகவும் வட கொரிய தலைவர் முன்னர் மன்னிப்பு கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Kim Jong Un அசத்தல்: வித்தியாசமான முறையில் நாட்டு மக்களுக்கு கூறினார் ‘Happy New Year’
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR