Mind Relaxation Techniques : தற்போதையை பரபரப்பான கால சூழலில், யாராலும் நிம்மதியான சூழலில் வாழ முடியவில்லை. காரணம், நாம் அது போன்ற ஒரு உலகில் இயங்கி கொண்டிருக்கிறோம். இதனால், மனதும் உடலும் ஓய்வே இல்லாதது போல உணர்கிறது. இந்த சமயத்தில் நாம் இரண்டையும் அமைதிப்படுத்த என்ன செய்ய வேண்டும் தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூச்சு பயிற்சி:


தினமும் காலையில் எழுந்தவுடன், ஒரு அமைதியான சூழலில் அமர்ந்தூ ஆழமாக மூச்சை இழுத்து விட்டு பயிற்சி செய்ய வேண்டும். ஒரு நாசி துவாரத்தால் மூச்சை இழுத்து சில விநாடிகள் கழித்து இன்னொரு நாசி துவாரத்தால் மூச்சை விட வேண்டும். இப்படி சில நிமிடங்கள் செய்வதால், மனமும் உடலும் ரிலாக்ஸ் ஆகுமாம். 


தியானம்:


தினமு சில நிமிடங்களை தியானத்திற்காக ஒதுக்க வேண்டும். இப்படி செய்வதால், நாம் இப்போது எங்கு இருக்கிறோம், எப்படி இருக்கிறோம் என்பதை உணர முடியும். முடிந்ததை நினைத்து வருந்தாமல்-வரப்போவதை நினைத்து கவலை கொள்ளாமல் இருக்க, தியானம் செய்யலாம். 


உடற்பயிற்சி:


தினமும் வாக்கிங், யோகா, நடனம் ஆடுவது போன்ற உடற்பயிற்சிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும். இதனால், நமக்கு எண்டோர்ஃபின்ஸ் ஹார்மோன் சுரக்கும். இதனால் உங்கள் மனநிலை மேம்படும்.



தூக்கம்:


இந்த டிஜிட்டல் உலகில் பலரும் ஓடிக்கொண்டே இருப்பதால் தூங்குவதற்கு யாருக்கும் சரியாக நேரம் கிடைப்பதில்லை. இது குறித்து பேசும் மருத்துவர்கள், ஒரு மனிதருக்கு குறைந்தது 7-9 மணி நேரம் தூக்கம் அவசியமாக இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் பலர் வெறும் 4-5 மணி நேரங்கள் மட்டுமே தூங்குகின்றனர். நல்ல தூக்கம் இருந்தால் மட்டுமே மனதும் உடலும் அமைதியாக இருக்கும். 


ஸ்கிரீன் டைம்:


ஒரு சிலர், வேலை இருக்கும் நேரங்களில் போனை விடுத்து, லேப்டாப்பை பார்ப்பதையே வேலையாக வைத்திருக்கின்றனர். லீவ் நாட்களில் போனை மட்டுமே முறைத்து பார்க்கும் இவர்கள், தொடர்ந்து ரீல்ஸ், மீம்ஸை பார்த்து பொழுதை கழிக்கின்றனர். மனதை அமைதிப்படுத்த, இதை செய்ய கூடாது. உங்கள் ஸ்கிரீன் டைமை குறைத்து, கொஞ்சம் இயற்கையுடன் இணைந்து வாழ வேண்டும்.


மேலும் படிக்க | உடலை வருத்திக் வேலை செய்யாதீர்கள், உயிரை விட பெரிது ஏதும் இல்லை


எழுதுதல்:


நம் மனதில் இருக்கும் விஷயங்களில், யாரேனும் ஒருவரிடம் கூறினால் அது பாதியாக குறையும் என்று பெரியவர்கள் கூறுவர். இது உண்மைதான் என அதன் பலனை அனுபவித்தவர்களும் கூறுகின்றனர். ஆனால் பலருக்கு, தங்கள் மனதில் கூறும் விஷயங்களை பகிர்ந்து கொள்ள ஒரு நல்ல மனிதர் கிடைப்பதில்லை. அந்த சமயத்தில் கைக்கொடுப்பதுதான் ஜர்னல். உங்களுக்கு தோன்றும் விஷயங்களை இதில் எழுதி, அதை ஒரு நண்பனை போல ட்ரீட் செய்தால் மனம் லேசாவதை உணர்வீர்கள். 


படைப்பாற்றல்:


உங்களிடம் இருக்கும் உருவாக்குதல் திறனை நீங்கள் பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். பெயிண்ட் செய்வது, கைவினை பொருட்கள் செய்வது, இசையமைக்க கற்றுக்கொள்வது போன்றவை, உங்கள் மனதை அமைதப்படுத்தும். 



மனதிற்கு பிடித்தவர்களுடன் பேசுவது: 


உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் என, உங்களை பிடித்த சிலர் இந்த உலகில் கண்டிபாக இருப்பார்கள். அவர்களிடம் அமர்ந்து அவர்களை பற்றி பேசலாம், உங்களுக்குள் பொதுவாக இருக்கும் விஷயங்கள் பற்றி பேசலாம். இதனால், மனம் லேசாகும். 


மேலும் படிக்க | பிறருக்கு உங்களை பார்த்தவுடன் பிடிக்கனுமா? இந்த 8 விஷயங்களை பண்ணுங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ