உடலை வருத்திக் வேலை செய்யாதீர்கள், உயிரை விட பெரிது ஏதும் இல்லை

ஆரோக்கியத்தை பொருட்படுத்தாமல் நீண்ட நேரம் வேலை செய்வது என்பது ஆபத்தானது

அதிக நேரம் வேலை பார்ப்பது உடலுக்கும் மனநலனுக்கும் தீங்கு விளைவிக்கும். வாரத்துக்கு 55 மணி நேரத்திற்கு மேலாக பணி செய்வது இதய நோய்களுக்கு வழிவகுக்கும். நெஞ்சு வலி மற்றும் மாரடைப்பு ஏற்படக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

1 /7

உடல் ஆற்றலுக்கு ஏற்பவே வேலை செய்ய முடியும். மொத்த ஆற்றலையும் இழக்கும் அளவிற்கு வேலை செய்தால் உடல் மற்றும் மனநலன் பாதிப்பு ஏற்படும். அதிக வேலை செய்வதால் முதலில் தூக்கத்தை இழப்பீர்கள். 

2 /7

போதுமான தூக்கம் உறுப்புகளுக்கு ஓய்வளித்து உடல் மற்றும் மனநலனை காத்திடும். தூக்கத்தை தொலைக்கும் போது மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். வேலை செய்து கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் சாப்பிட கூட மறந்துவிடுவோம். 

3 /7

உரிய நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது, சாப்பாட்டை தவிர்ப்பது உடலில் இரத்த சர்க்கரை அளவுகளை குறைத்திடும். இதனால் ஆற்றல் குறைந்து சோர்வாக உணர்வீர்கள். அதன் பிறகு ருசிக்காக ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடுவீர்கள்.

4 /7

12-14 மணி நேரம் வேலை செய்தால் உடற்பயிற்சிக்கு போதுமான நேரம் கிடைக்காது. இறுதியில் இதயநோய் பாதிப்புக்கு ஆளாவீர்கள். வேலையிலேயே மூழ்கிவிட்டால் உங்களுக்காக வாழும் உறவுகளை புறக்கணிக்க தொடங்குவீர்கள். 

5 /7

உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாது. அனைவரும் உடன் இருந்தாலும் தனிமையாகவே உணர்வீர்கள். விடுப்பு நாட்களில் தூங்கி கொண்டே இருப்பீர்கள். இது உங்களுடைய உறவுகளுக்கு எரிச்சலை உண்டாக்கும். குடும்பத்துடன் வெளியே செல்லவும் தயக்கம் காட்டுவீர்கள்.

6 /7

வேலை பளுவை சமாளிக்க புகைப்பிடிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்துவீர்கள். மது அருந்த தொடங்குவீர்கள். இதனால் உங்கள் திறன் குறையும். உடலில் காயங்கள் ஏற்பட்டால் சீக்கிரம் குணம் ஆகாது. உங்களுக்கு பிடித்தமான வேலையிலேயே கவனம் இழப்பீர்கள்.

7 /7

இவையெல்லாம் உங்களை ஒரு மனிதனாகவே இருக்க செய்யாது. இதனால் ஆரோக்கியம் கெடுவதும் மட்டுமின்றி உயிரிழப்புகூட நேரிடும். எனவே, உடலை வருத்திக் வேலை செய்யாதீர்கள், உயிரை விட பெரிது ஏதும் இல்லை