ராகு கேது பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை, புகழ் கூடும்
Rahu Ketu Transit: ராகு மற்றும் கேது நிழல் கிரகங்கள் அல்லது பாவ கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ராகு கேதுவின் ராசி மாற்றம், 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும்.
ராகு கேது பெயர்ச்சி 2022: கிரகங்களில் சனி பகவானுக்கு பிறகு மெதுவான இயக்கம் கொண்ட கிரகங்கள் ராகு மற்றும் கேது ஆகும். அதுமட்டுமின்றி, இந்த கிரகங்கள் எப்போதும் எதிர் திசையில் நகர்வதால், இவற்றின் அசுப நிலை மனிதனின் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை உருவாக்குகின்றன.
ஆகையால் ராகு மற்றும் கேது நிழல் கிரகங்கள் அல்லது பாவ கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த வருடம் ஏப்ரல் 12 ஆம் தேதி ராகு-கேது ராசியை மாற்றப் போகிறார்கள். ராகு கேதுவின் ராசி மாற்றம், 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும்.
மேஷம்:
ராகு, கேதுவின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்திகளைத் தரும். தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். பண ஆதாயம் அதிகம் இருக்கும். பண வரவு இருப்பதுடன் இந்த காலத்தில் அதிக அளவில் பணத்தை சேமிப்பீர்கள். இந்த காலகட்டத்தில் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்ப்பது நல்லது.
மிதுனம்:
ஏப்ரல் மாதம் ராகு கேதுவின் மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கும். அவர்களின் வருமானம் அதிகரிக்கும். மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும். மொத்தத்தில், இந்த நேரம் அனைத்து வகையிலும் சிறப்பாக இருக்கும்.
மேலும் படிக்க | ஏப்ரல் 6 ஆம் தேதி இந்த 3 ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்
துலாம்:
இந்த நேரம் துலாம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும், மரியாதையையும் தரும். பணியிடத்தில் வெற்றி உண்டாகும். வியாபாரம் செய்யும் துலா ராசிக்காரகளின் வியாபாரம் செழிக்கும். இந்த காலத்தில் பொறுமையை இழக்காமல் இருப்பது நல்லது.
தனுசு:
ராகு-கேதுவின் ராசி மாற்றம் தனுசு ராசிக்காரர்களுக்கு நிதி பலன்களைத் தரும். செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் வருமானம் அதைவிட அதிகமாகவே இருக்கும். சுப பயணங்கள் மற்றும் யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
மகரம்:
ராகு-கேதுவின் சஞ்சாரம் மகர ராசிக்காரர்களுக்கு வருமானத்தை அதிகரிக்கும். தாயின் மூலம் பணம் கிடைக்கும். பயணம் செல்லும் வாய்ப்புகள் உண்டு. உங்கள் கோபத்தைக் கட்டுக்குள் வைத்திருந்தால், இந்த நேரம் பல நன்மைகளைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | செவ்வாயின் ராசி மாற்றத்தால் செழிக்கப்போகும் ராசிகள்: இவர்கள் மீது அதிர்ஷ்ட மழை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR