ராசி மாறுகிறார் ராகு: இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் ஆரம்பம், லாபம் பெருகும்

Rahu Transit: ராகுவின் ராசி மாற்றத்தால், எந்த ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான தாக்கம் இருக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.   

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 29, 2022, 11:25 AM IST
  • மிதுன ராசிக்காரர்களின் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும்.
  • பதவி உயர்வு கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன.
  • காவல்துறை நிர்வாகம், மருத்துவம், பொறியியல் துறை சார்ந்தவர்கள் ஆதாயம் அடைவார்கள்.
ராசி மாறுகிறார் ராகு: இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் ஆரம்பம், லாபம் பெருகும் title=

ராகு பெயர்ச்சி 2022: மனிதர்களின் வாழ்க்கையை மிக விரைவாகவும் அதிகமாகவும் பாதிக்கும் கிரகங்களில் ஒன்று ராகு. ராகு ஒரு நிழல் கிரகம் ஆகும். ராகு பொதுவாக ஒரு மழுப்பலான கிரகமாக கருதப்படுகின்றது. 

ஒரு மர்மமான கிரகமான ராகு திடீர் நிகழ்வுகளின் கிரகம் என்று விவரிக்கப்பட்டுள்ளது. ராகு தனது ராசியை மாற்றப் போகிறார். ஜோதிட சாஸ்திரத்தின் படி, ராகு தற்போது ரிஷப ராசியில் இருக்கிறார். எனினும், 12 ஏப்ரல் 2022 அன்று செவ்வாயின் ராசியான மேஷ ராசியில் பிரவேசிக்கவுள்ளார். ராகுவின் ராசி மாற்றத்தால், எந்த ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான தாக்கம் இருக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

மிதுனம்:
ஜோதிட சாஸ்திரப்படி ராகு பெயர்ச்சி காலத்தில் மிதுன ராசிக்காரர்களின் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். நிர்வாக சேவையுடன் தொடர்புடையவர்களுக்கு மரியாதை, பதவி மற்றும் கௌரவம் கிடைக்கும்.

இந்த காலகட்டம், வணிகம் செய்பவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில், நிதி முதலீட்டின் முழு பலனும் கிடைக்கும். இது தவிர, பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வதும் பயனளிக்கும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு நிதி நிலையில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த நேரத்தில் நீங்கள் அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். அலுவலகத்திலும் பாராட்டுக்கள் குவியும். 

சந்திர கிரகத்தால் அதிக பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதே சமயம் வியாபாரத்தில் நீங்கள் செய்யும் ஒப்பந்தங்களால் அதிக லாபம் கிடைக்கும். இந்த காலத்தில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது நன்மை தரும்.

மேலும் படிக்க | Venus Transit: கும்பத்தில் சுக்கிரன் சஞ்சாரம்! கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிக்காரர்கள் 

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கும் ராகுவின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் புதிய தொழில் தொடங்கலாம். பங்குச் சந்தையில் பண ஆதாயம் ஏற்படக்கூடும். ராகுவின் பெயர்ச்சி காலத்தில், பணியிடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. காவல்துறை நிர்வாகம், மருத்துவம், பொறியியல் துறை சார்ந்தவர்கள் ஆதாயம் அடைவார்கள்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு ராகுவின் சஞ்சாரம் நன்மை தரும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தினசரி வருமானம் அதிகரிக்கும். ராகு சஞ்சார காலத்தில் சனி பகவானுடன் தொடர்புடைய எண்ணெய், இரும்பு போன்ற பொருட்கள் சம்பந்தமான காரியங்களை செய்பவர்களுக்கு அதிக பலன் கிடைக்கும். கும்பம் சனியின் ராசியாகும். ராகு சனியின் நட்பு கிரகமாகும். ஆகையால், கும்ப ராசிக்காரர்கள் இந்த காலத்தில் பங்குச்சந்தையில் பல நன்மைகளைப் பெறலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் கையில் தங்காத ராசிகள் இவைதான்: உங்க ராசி என்ன? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News