இன்றைய காலகட்டத்தில் மருத்துவர் சில ஆயிரம் ரூபாய்களை விட்டுக் கொடுப்பதே பெஇரிய விஷயம் என்ற நிலையில் சுமார் ஐந்து கோடி ரூபாயை விட்டுக் கொடுப்பது என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத விஷயம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவில் நடந்த அதிசயம் இது. அதிசயம் ஆனால் உண்மை என்றுதான் சொல்ல வேண்டும். அமெரிக்காவில் (America) புற்றுநோய் மருத்துவர் ஒருவர், 650,000 அமெரிக்க டாலர்களுக்கும்  அதிகமான மதிப்புள்ள கட்டணங்களை தள்ளுபடி செய்து அனைவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறார். இப்போது உலகம் முழுவதும் அவர் காக்க வந்த கடவுளாகவே பார்க்கப்படுகிறார்.


ஆர்கன்சாஸ் (Arkansas) என்ற ஊரைச் சேர்ந்த டாக்டர் ஒமர் டி அதிக் (Dr Omar T Atiq) 2020 வரை பைன் பிளஃப் சமூகத்திற்கு (Pine Bluff community) சேவை செய்தவர். ஆர்கன்சாஸ் புற்றுநோய் (Cancer) கிளினிக்கை நடத்தி வந்தார். தனது மருத்துவமனையை மூட முடிவு செய்தார் அதிக்.


Also Read | Shocking Health Facts: அளவுக்கு மிஞ்சினால் வேம்பும் விஷமே!!


மருத்துமனையை (Hospital) மூடும்போது, தனது நோயாளிகள் செலுத்தவேண்டிய நிலுவைத்தொகையை வசூலிப்பதற்காக ஒரு நிறுவனத்தை அவர் நியமித்தார். இந்த சூழ்நிலையில், அமெரிக்காவில் சுகாதாரத்திற்கு ஆகும் உண்மையான செலவு எவ்வளவு என்பதை அவர் உணர்ந்தார். அதோடு, COVID-19 எவ்வாறு பெரும்பாலான மக்கள் சிகிச்சைக்கு பணம் செலுத்த முடியாமல் சிரமப்படுகிறார்கள் என்பதை கருத்து வருத்தப்படார்.


இப்படி பல விஷயங்களை கருத்தில் கொண்டு, தனக்கு வரவேண்டிய நிலுவைத்தொகைகளை வாங்க வேண்டாம் என்று முடிவு செய்தார். அதுமட்டுமல்ல, மற்றவர்களுக்கு உதவ வாய்ப்பளித்ததற்கு ''நன்றி'' தெரிவித்துள்ளார். அவர் தனது நோயாளிகளிடம் இருந்து பணத்தை திருப்பப் பெறும்போது, அவர்கள் 5 முதல் 50 டாலர்கள் வரை செலுத்துவதைக் கண்டார்.


"நோயாளிகள் பணம் செலுத்த விரும்பினாலும், அவர்களுக்கு பணம் செலுத்தும் திறன் இல்லை" என்பதை உணர்ந்ததாகவும், அதனால் தான் இந்த முடிவுக்கு வந்ததாகவும் மருத்துவர் ஒமர் டி அதிக் (Dr Omar T Atiq) கூறுகிறார்.  


Also Read | நாடு முழுவதும் ஜனவரி 16முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்


கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றுநோயை பற்றி பேசும் மருத்துவம், இந்த தொற்றுநோயால் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர் என்றும், அதிலும் அமெரிக்காவில் பாதிப்பு அதிக எண்ணிக்கையில் உள்ளது என்றும் கூறுகிறார்.


கட்டணத்தை தள்ளுபடி செய்யும் முடிவை ஒமர் டி அதிக் (Dr Omar T Atiq) எப்படி அறிவித்தார் தெரியுமா? கிறிஸ்துமஸ் அட்டை மூலம் தெரிவித்து சாண்டா கிளாஸ் போல ஆச்சரியப்படுத்தினார். ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனி வாழ்த்துக்களை அனுப்பிய மருத்துவர், அவர்களுக்கு அனுப்பிய செய்திக் குறிப்பில் தனிப்பட்ட முறையில் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.  


முன்னதாக 2020 ஜூன் மாதம் தனது நோயாளிகளின் கடனை ரத்து செய்த மருத்துவர், தற்போது இரண்டாவது முறையாக கடன் ரத்து செய்யப்பட்டதை கூறினார்.


Also Read | Planet: புதனுக்கு வால்மீனைப் போல வால் இருப்பதன் ரகசியம் என்ன தெரியுமா?


இது வெறும் கடன் ரத்து செய்யப்பட்ட கதை மட்டுமல்ல, மருத்துவத்திற்காக மக்கள் எப்படி கடனாளியாகின்றனர் என்பதையும், நோய் மக்களின் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதற்குமான உதாரணம் என்று மருத்துவர் ஒமர் டி அதிக் (Dr Omar T Atiq) கூறுகிறார்.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR