நாடு முழுவதும் ஜனவரி 16முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்: மத்திய அரசு

நாடு முழுவதும் ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்படும் என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 9, 2021, 05:09 PM IST
  • கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கு DCGI ஒப்புதல் அளித்தது.
  • இதையடுத்து, கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகையும் நாடு முழுவதும் நடத்தப்பட்டது.
  • இந்தியா பயோடெக்கின் கோவாக்சின் (COVAXIN) முற்றிலும் இந்தியாவின் தயாரிப்பாகும்.
நாடு முழுவதும் ஜனவரி 16முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்: மத்திய அரசு title=

கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கு மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் (DCGI) ஒப்புதல் அளித்தது. சீரம் நிறுவனத்தின் (SII)கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட் (Covishield) மற்றும் பாரத் பயோடெக்கின் தடுப்பூசியான கோவாக்சின் (Covaxin) ஆகியவற்றின் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக, இந்திய மருந்து கட்டுபாட்டு ஆணைத்தின் (DCGI) இயக்குனர் வி.ஜி சோமானி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதையடுத்து, கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகையும் நாடு முழுவதும் நடத்தப்பட்டது.
இந்நிலையில், நாடு முழுவதும் ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்படும் என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

கோவிஷீல்ட் (Covishield) மற்றும் கோவாக்சின் என்ற தடுப்பூசிகளை  அனைத்து மக்களுக்கு குழப்பம் ஏதுமில்லாமல் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், நாடு முழுவதும் இதற்கான ஒத்திகை நடத்தப்படுகிறது. இந்த தடுப்பூசி முதலில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் அல்லது கொரோனா எதிரான நடவடிக்கையில் களத்தில் உள்ள ஊழியர்களுக்கு போடப்படும்.

இந்தியா பயோடெக்கின் கோவாக்சின் (COVAXIN) முற்றிலும் இந்தியாவின் தயாரிப்பாகும். இந்த தடுப்பூசி ஹைதராபாத் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. கோவிஷீல்ட் தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் (Oxford)மற்றும் அஸ்ட்ராஜெனெகா  (AstraZeneca)ஆகியோரால் இணைந்து தயாரிக்கப்படுகிறது.

ALSO READ | இந்தியாவின் தடுப்பூசிக்காக உலகம் காத்திருக்கிறது : பிரதமர் மோடி

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News