காலையில் வரிசையாக பல அலாரம்களை வைப்பவரா நீங்கள்...? இதனால் வரும் ஆபத்துகள் இதோ!
Lifestyle News: காலையில் வரிசையாக பல அலாரம்களை வைப்பது உடல்நலனுக்கு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து சற்று விரிவாக இங்கு காணலாம்.
Lifestyle News In Tamil: காலையில் சிக்கிரமாக எழுந்திருப்பது நல்லது என்பது பெரியோரின் வாக்கு. நீங்கள் காலையில் எழுந்து சுறுசுறுடன் உங்களின் நாளை தொடங்கினால் அது பிரமாதமாக இருக்கும் என்பதும் ஒருவித நம்பிக்கை. இது ஒருபுறம் இருக்க, காலையில் 8 மணி அலுவலகத்திற்கு, பள்ளி - கல்லூரிக்கோ செல்ல வேண்டும் என்றால் 7.30 மணிவரை தூங்கிக்கொண்டு இருப்போரும் இருக்கிறார்கள்.
அப்படியான சூழலில் அலாரம் வைத்து தூங்குவது என்பது பலரின் வழக்கமாகும். 7 மணிக்கு எழுந்திருக்க வேண்டுமென்றால் அனைவரும் 7 மணிக்கு அலாரம் வைப்பார்கள். இதுதான் வழக்கமாக இருந்தது. ஆனால், இப்போதெல்லாம் மொபைலில் அலாரம் வைக்கும் வசதி வந்த உடன் 7 மணிக்கு எழுந்திருக்க வேண்டுமென்றால் காலை 6 மணி முதல் சில நிமிடங்கள் இடைவெளியில் வரிசையாக பல அலாரம் வைப்பது வழக்கமாகிவிட்டது.
அலாரம் ஆபத்தானது
அதாவது, 7 மணிக்கு அலாரம் அடித்த உடன் எழுந்திருக்க இயலாதவர்கள், இப்படி கொஞ்சம் கொஞ்சமாக தூக்கத்தை போக்கி சரியான நேரத்திற்கு எழுந்து சென்றுவிடலாம் என்ற ஐடியாவில் இந்த முறையை பின்பற்றுகின்றனர். ஆனால், இப்படி காலையில் வரிசையாக பல அலாரம்களை வைப்பது உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் என்றால் உங்களால் நம்ப முடியுமா...? ஆம், அதுதான் காலையில் வரிசையாக பல அலாரம்களை வைப்பதன் மூலம் உடல் ரீதியாகவும் சரி, மன ரீதியாகவும் சரி உங்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
மேலும் படிக்க | தினமும் உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் என்னென்ன பிரச்சனைகளை சந்திப்பீர்கள்..!
ஜோர்டான் பிரஸ் (Jordan Bruss) என்ற டிக்டாக் பயனர் ஒருவர் தனது வீடியோ ஒன்றில்,"நீங்கள் தினமும் காலையில் பல அலாரங்களை வைப்பவர் என்றால் உங்களுக்கு ஒரு மோசமான செய்தி உள்ளது. என் மீது கோபப்படாமல் கேளுங்கள், உங்களுக்கு உதவவே முயற்சிக்கிறேன்" என பேசத் தொடங்குகிறார்.
அலாரத்தால் என்ன பிரச்னை?
அதில் தொடர்ந்து பேசிய அவர், "தினமும் காலையில் பல அலாரங்களை வைத்து எழுந்திருப்பதால், உங்களின் விரைவான கண் இயக்கம் (REM) சுழற்சி தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகிறது. இதனால் மந்தநிலை, அதிகமான தூக்கம், சோர்வு, அடிக்கடி ஏற்படும் மனநிலை மாற்றங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தும். உங்களின் கார்டிசோல் அளவும் கூட அதிகரிக்கும். அதிகப்படியான கார்டிசோல் உங்களின் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். எனவே அலாரம் அடித்ததும், நேரமாகிவிட்டது என்றால் உடனே எழுந்துவிடுங்கள். உங்களை நீங்களே பிரச்னையை உருவாக்கிக்கொள்ளாதீர்கள், காலையில் ஒரு அலாரம் வைத்து, அது அடித்ததும் எழுந்துவிடுங்கள்" என்றார்.
மேலே கூறப்பட்டதை மருத்துவ வல்லுநர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஒருவரின் உடல் நலனுக்கும், மன நலனுக்கும் ஆரோக்கியமான தூக்கம் என்பது அவசியமானது. அதிலும், ஒருவரின் தூக்கத்தில் விரைவான கண் இயக்கம் (REM) என்பதும் முக்கியமாகும். தூக்கத்தின் இறுதி நிலையான இந்த விரைவான கண் இயக்கம் (REM) என்பது இரவின் பிற்பகுதியில் அடிக்கடி ஏற்படும். இது நினைவுகளைச் செயலாக்குவதற்கும் படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கும் முக்கியமானது என வல்லுநர்களால் கூறப்படுகிறது. இந்த நிலையை சீர்குலைப்பது மூளையின் செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கும் என்கின்றனர். எனவே, காலையில் ஒரு அலாரம் வைத்து உடனே எழுந்துவிடுவது நல்லது.
மேலும் படிக்க | குளிக்கும்போது சிறுநீர் கழித்தால் இவ்வளவு ஆபத்துகளா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ