Sleeping Tips : தூங்குவதற்கு செல்லும் முன்பு சிலர் செய்யும் இதுபோன்ற தவறுகள் தான் அவர்களின் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு காரணமாகின்றன
Sleeping Tips Tamil : ஒருவரின் வாழ்க்கை முறையும் ஆரோக்கியமும் ஒன்றோடொன்று பின்னிபிணைந்திருக்கும் நிலையில், அன்றாட வாழ்க்கை முறையில் செய்யக்கூடாத சில தவறுகள் இருக்கின்றன, அதன்படி தூங்க செல்வதற்கு முன்பு செய்யக்கூடாத ஒரு விஷயத்தை இங்கே பார்க்கலாம்.
தூங்குவதற்கு முன்பு தண்ணீர் குடிக்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. தூங்குவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் உடலில் இருக்கும் நச்சுத் தன்மையை நீக்கும். இது ஆரோக்கியத்துக்கு நல்லது.
இரவில் தண்ணீர் குடிக்கும்போது உடலுக்கு தேவையான தாதுக்களையும், வைட்டமின்களை உறிஞ்சவும் உதவுகிறது. இதுஒருபுறம் நன்மை என்றாலும் இன்னொருபுறம் ஆரோக்கிய தீமைகளும் இருக்கின்றன, அதாவது இரவில் அதிக தண்ணீர் குடிப்பது உடலுக்கு ஆபத்தானது.
இதய நோய் நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவில் கட்டாயம் அதிக தண்ணீர் குடிக்கவே கூடாது. ஏனென்றால் அவர்கள் இரவு நேரத்தில் மீண்டும் மீண்டும் கழிவறைக்கு செல்ல வேண்டி வரலாம். இதனால் அவர்களின் ஆரோக்கியம் மேலும் மோசமடையக்கூடும்,
இரவில் தூங்கும் முன் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது நல்லது. இது உடலை இயற்கையாகவே நச்சுத்தன்மையாக்க உதவுகிறது. வயிற்று சார்ந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணமும் பெறலாம்.
இரவில் தூங்கும் முன் வெதுவெதுப்பான நீரைக் குடித்தால், அது உங்களை மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுவித்து, உங்கள் மூளையை சுறுசுறுப்பாகச் வைக்கும். தூக்கமும் நன்றாக வரும்.
ஆனால் இரவில் தூங்குவதற்கு எத்தனை மணி நேரத்துக்கு முன்பு தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டியிருந்தால் அதாவது தாகம் அதிகமாக இருந்தால் குறைந்தபட்சம் தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக குடியுங்கள்.
அதிக தண்ணீர் குடித்துவிட்டு உடனடியாக படுக்கைக்கு செல்வது நல்லதல்ல. அது ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே தண்ணீர் எப்போது குடிக்க வேண்டும், எப்படி குடிக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துங்கள்.