தினமும் உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் என்னென்ன பிரச்சனைகளை சந்திப்பீர்கள்..!

Lifestyle Tips : உடற்பயிற்சி தினமும் செய்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்றாலும், அதனை செய்யாதபோது பல ஆரோக்கிய பிரச்சனைகளை கட்டாயம் சந்திக்க வேண்டியிருக்கும். 

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 7, 2024, 03:34 PM IST
  • உட்கார்ந்த வாழ்க்கை முறையில் இருக்கிறீர்களா?
  • உங்களுக்கு கட்டாயம் உடற்பயிற்சி அவசியம்
  • இல்லையென்றால் இந்த பிரச்சனைகள் எல்லாம் வரும்
தினமும் உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் என்னென்ன பிரச்சனைகளை சந்திப்பீர்கள்..! title=

Lifestyle Tips Tamil : உடற்பயிற்சி செய்யும்போது உங்கள் உடல் புத்துணர்ச்சி அடைகிறது. ஆனால் அதனை செய்யாமல் தினமும் உட்கார்ந்து கொண்டே இருக்கும் வாழ்க்கை முறையில் இருந்தால் நிச்சயம் ஆரோக்கிய பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். இப்போதெல்லாம் செல்போன், தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்தே பொழுதை கழிக்கும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. சிலருக்கு வேலை காரணமாக நாள் முழுவதும் உட்கார்ந்தே இருக்க வேண்டியிருக்கும். இவர்கள் எல்லாம் நிச்சயம் உடற்பயிற்சி செய்வதை கட்டாயம் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். ஒருவேளை உடற்பயிற்சிக்காக போதுமான நேரத்தை ஒதுக்கவில்லை என்றால் என்னென்ன பிரச்சனைகளை சந்திப்பீர்கள் என தெரிந்து கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி இல்லாமல் நாள் முழுவதும் உட்கார்ந்து கொண்டே இருப்பவர்களுக்கு வரும் பிரச்சனைகள் ; 

1. உடல் எடை கூடும்

உட்கார்ந்து கொண்டே இருப்பவர்களுக்கு முதலில் உடல் எடை கூடும். அதாவது தினசிரி உடலில் எரிக்கப்பட வேண்டிய கலோரிகள் எரிக்கப்படாமல் அதிகப்படியான கலோரிகள் சேர்ந்து அவை கொழுப்பாக உடலில் தேங்கிவிடும். இதன் விளைவாக இதயநோய் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்கள் எல்லாம் எவ்வளவு சீக்கிரம் வேண்டுமானாலும் வரலாம். 

2. இதய பிரச்சனை

உட்கார்ந்தே இருப்பவர்களுக்கு ஏன் இதய பிரச்சனை வருகிறது என்றால், ரத்தம் ஓட்டம் மற்றும் ரத்த அழுத்தத்தில் சீரான நிலை இருக்காது. அதிகளவு கெட்ட கொழுப்பு உடலில் தேங்க ஆரம்பிக்கும். இந்த கொழுப்பு சேரும்போது நல்ல கொழுப்பின் அளவு உடலில் குறைய ஆரம்பிக்கும். கெட்ட கொழுப்புகள் இதய தமனிகளில் சேரத் தொடங்கும்போது இதய பிரச்சனைகள் வர ஆரம்பிக்கின்றன. மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துகளையும் எதிர்கொள்ள நேரிடும். 

3. டைப் 2 நீரிழிவு நோய்

உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கு டைப் 2 நீரிழிவ நோய் ஆபத்து நிச்சயம் வரும். ஏனென்றால் உடல் செயல்பாடுகள் இல்லாதபோது இன்சுலின் உணர்திறன் குறைந்துவிடுகிறது. செல்களுக்கு இன்சுலின் அளவு குறையும்போது அதிக சர்க்கரை அளவு ரத்தத்தில் அதிகரிக்கும். இது தொடரும்பட்சத்தில் சீக்கிரம் டைப் 2 நீரிழிவு நோய் வந்துவிடும். பார்வை பிரச்சனைகளும் அடுத்து வரத் தொடங்கும். 

மேலும் படிக்க | குளிக்கும்போது சிறுநீர் கழித்தால் இவ்வளவு ஆபத்துகளா?

4. தசை பலவீனம்

உடற்பயிற்சி செய்தால் தசைகள் வலுவாகும். உடற்பயிற்சி இல்லாதபோது தசைகளுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல் அவை இயல்பாகவே வலுவிழக்க ஆரம்பிக்கின்றன. தசைகள் பலமிழக்கும்போது சீக்கிரம் உடலில் காயமாகும். புண்கள் ஆறாது. இதுபோன்ற பிரச்சனைகள் இருந்தால் உடங்கள் உடல் ஆற்றல் இல்லாமல் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். 

5. எலும்பு பலவீனம்

உடற்பயிற்சிகள் எலும்புகளுக்கு பலத்தை கொடுக்கும் நிலையில், அத்தகைய பயிற்சிகள் ஏதும் இல்லாதபோது எலும்புகள் வலுவில்லாமல் தான் இருக்கும். குறிப்பாக உட்கார்ந்த வாழ்க்கை முறையில் இருப்பவர்களுக்கு இத்தகைய பிரச்சனைகள் நிச்சயம் இருக்கும். வயதானவர்களுக்கு வரும் இப்பிரச்சனைகள் எல்லாம் உட்கார்ந்த வாழ்க்கை முறையில் இருப்பவர்களுக்கு முன்கூட்டியே வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

6. மோசமான மன ஆரோக்கியம்

உட்கார்ந்த வாழ்க்கை முறையில் இருப்பவர்கள் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்சனை மோசமான மன ஆரோக்கியம். எதிலும் தெளிவாகவே இருக்கமாட்டார்கள். அவர்களிடத்தில் ஒருவிதமான குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். சீரற்ற உணர்ச்சி நிலைகளை நீங்கள் காண முடியும். அதனால் மோசமான மன ஆரோக்கியத்தில் இருந்து விடுபட வேண்டும் என்றால் தினசரி உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 

7. நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு

உட்கார்ந்த வாழ்க்கை முறையில் இருப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாகும். இதனால் தொற்று நோய் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். மேலும் செரிமான மண்டலம் வலுவிழக்கும். சில புற்றுநோய்கள் கூட வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக, பெருங்குடல், மார்பகம் மற்றும் எண்டோமெட்ரியல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எனவே இத்தகைய பிரச்சனைகள் இல்லாமல் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் தினசரி வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டு வாருங்கள். தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். முடிந்தளவு சீக்கிரம் உட்கார்ந்த வாழ்க்கை முறையில் இருந்து வெளியேறிவிடுவது நல்லது. 

மேலும் படிக்க | ஒரு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு எவ்வளவு செலவாகும் என்று தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News