அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவது உறுதியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும், காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும் என்று உற்சாகத்துடன் உறுதி செய்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அஜித் படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அஜித் குமார் நடிக்கும் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். அனிருத் இசையமைக்க, சுபாஸ்கரன் தயாரிக்கிறார். இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும். அடுத்த ஆண்டின் நடுவே படம் வெளியாகும். படத்தின் மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும். அஜித் குமாருடன் கைகோத்ததற்கு லைகா நிறுவனம் மகிழ்ச்சி கொள்கிறது” என்று தெரிவித்துள்ளது. நயன்தாரா இப்படத்தின் நாயகியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.  


கடந்த சில நாட்களாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. வலிமை படத்துக்குப் பிறகு ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்தாலும் அந்தப் படத்துக்கு முன்பாக அஜித் - விக்னேஷ் சிவன் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும், படமும் முன்னதாக வெளியாகிவிடும் என்றும், இதனால் ஏகே 61 படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன்தான் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் ஏகே 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க |  #AK62 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு : கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!



அஜித் படத்துக்குப் பாடல் எழுதிய விக்னேஷ் சிவன் முதல் முறையாக அஜித்தை இயக்குவது குறிப்பிடத்தக்கது. இதனால் மிகுந்த உற்சாகத்துடன் ட்விட்டரில் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும், காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும் உங்களை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பை வழங்கிய அஜித் சாருக்கு நன்றி. என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என்று தெரிவித்துள்ளார். 


வழக்கமாக ஒரு படம் முடிந்த பிறகு அடுத்த படத்தைத் தொடங்கும் அஜித், திடீரென ஹெச்.வினோத், விக்னேஷ் சிவன் என ஒரே சமயத்தில் இரு படங்களில் கமிட்டாகியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இளம் இயக்குநர்களுடன் அஜித் கைகோப்பதும் வரவேற்புக்குரிய மாற்றம் என்றும் அவரது ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையுடன் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க |  ஹெச்.வினோத்தை ஓவர்டேக் செய்யும் விக்னேஷ் சிவன்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR