நடிகர் அஜித்தின் 61ஆவது படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கிவருகிறார். போனி கபூர் இப்படத்தைத் தயாரித்துவருகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமையைத் தொடர்ந்து 3ஆவது முறையாக இக்கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மஞ்சு வாரியர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம், வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகிவருகிறது. கல்லூரி பேராசிரியராக அஜித் இப்படத்தில் நடிக்கவுள்ளாராம். வித்யாசமான ஹேர்ஸ்டைல் மற்றும் லுக்குடன் அஜித் இப்படத்தில் தோன்றவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் தொடங்கியது.


இப்படத்தின் லுக்குடன் அஜித் தோன்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வெளியான வண்ணம் உள்ள்ன. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்  வீடியோவே தற்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது. 


மேலும் படிக்க | மீண்டும் சர்ச்சைக்குரிய கதையில் கை வைத்த ‘ஜெய்பீம்’ இயக்குநர்!- எந்த வழக்கு தெரியுமா?


 


வங்கிக்கொள்ளையை மையமாக வைத்து உருவாகும் படம் எனும் காரணத்துக்காக பிரபல வங்கி ஒன்று செட் போட்டு படக்குழு படமாக்கிவந்தது. அந்த செட் பற்றிய வீடியோதான் தற்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.



இப்படத்தின் டைட்டில், ரிலீஸ் தேதி மற்றும் பர்ஸ்ட் லுக் உள்ளிட்டவை அடுத்த மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | ஷங்கர் இயக்கும் ராம்சரண் படத்தில் மோசடி! - எச்சரிக்கும் விஜய்யின் 'வாரிசு' டீம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ