ஷங்கர் இயக்கும் ராம்சரண் படத்தில் மோசடி! - எச்சரிக்கும் விஜய்யின் 'வாரிசு' டீம்!

 நடிகர் ராம் சரணை வைத்து இயக்குநர் ஷங்கர் இயக்கிவரும் திரைப்படம் தொடர்பாக புதிய சர்ச்சை ஒன்று தற்போது கிளம்பியுள்ளது.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Jul 24, 2022, 06:41 PM IST
  • இயக்குநர் ஷங்கர் நடிகர் ராம் சரணை வைத்து படம் இயக்கிவருகிறார்.
  • ஷங்கர் இயக்கும் நேரடித் தெலுங்குப் படமான இதை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார்
  • இப்படம் தொடர்பாக அடுத்த சர்ச்சை ஒன்று தற்போது கிளம்பியுள்ளது.
ஷங்கர் இயக்கும் ராம்சரண் படத்தில் மோசடி! - எச்சரிக்கும் விஜய்யின் 'வாரிசு' டீம்! title=

இயக்குநர் ஷங்கர், நடிகர் ராம் சரணை வைத்து படம் ஒன்றை இயக்கிவருகிறார். ஷங்கர் இயக்கும் நேரடித் தெலுங்குப் படமான இதை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். 

ஷங்கரால் இயக்கிய பாய்ஸ் படத்தில் அறிமுகம் ஆன தமன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். வழக்கமான ஷங்கர் படம் போலவே இதுவும் அதிக பொருட்செலவுடன் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

விவசாயி மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரி என இப்படத்தில் இரு ரோல்களில் ராம்சரண் நடித்துவருவதாகக் கூறப்பட்டுவருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா ரிலீஸாக இப்படம் வெளியாக உள்ளது. முன்னதாக, இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான விவகாரம் சர்ச்சையானது.

இந்நிலையில் இப்படம் தொடர்பாக அடுத்த சர்ச்சை ஒன்று தற்போது கிளம்பியுள்ளது. அதாவது, ராம் சரண் நடிக்கும் 15ஆவது படமான இதில் நடிக்க ஆட்கள் தேர்வு நடப்பதாகவும் அதற்காகத் தங்களைத் தொடர்புகொள்ளுங்கள் எனக் கூறி சமூக வலைதளங்களில் சில பதிவுகள் வலம்வருகின்றன.

மேலும் படிக்க | ‘நம்பர் 1’ யாரு? சமந்தாவா, நயன்தாராவா?- திரி கிள்ளிப்போட்ட கரன் ஜோகர்; தீயாய் வெடித்தது சர்ச்சை!

 

இந்நிலையில், இந்தப் பதிவுகள் உண்மையல்ல என தயாரிப்பு நிறுவனம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. அது முழுக்க முழுக்கப் போலியான தகவல் எனவும், தங்களது நிறுவனம் அதுபோன்ற ஆட்தேர்வு எதிலும் ஈடுபடவில்லை எனவும் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

இப்படத்தைத் தயாரித்துவரும் Sri Venkateswara Creations நிறுவனம்தான் விஜய் நடித்துவரும் வாரிசு படத்தையும் தயாரித்துவருகிறது எனும் விஷயம் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இந்த முறை 'தாதாசாகேப் பால்கே' விருது யாருக்கு? ஏன்? - கோலிவுட் லெஜெண்டுகள் பற்றிய ஓர் அலசல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News