திருச்சிற்றம்பலம் பட ரிலீஸ் தேதியை முடிவு செய்த படக்குழு
திருச்சிற்றம்பலம் படத்தினை ஜூலை ஒன்றாம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மாறன். ஓடிடியில் ரிலீஸான இப்படம் தோல்வியை சந்தித்தது. மேலும், வெற்றிமாறனிடம் மட்டும்தான் தனுஷ் ஒழுங்காக கதையை கேட்கிறார்போல என்ற விமர்சனத்தையும் ரசிகர்கள் முன்வைத்தனர்.
மாறனுக்கு முன்னதாக வெளியான ஜகமே தந்திரம் படமும் தோல்வியடைந்ததால் ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் தனுஷ்.
அவர் தற்போது, ‘குட்டி’, ‘யாரடி நீ மோகினி’, ‘உத்தமபுத்திரன்’ ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
மேலும் படிக்க | தளபதி 66 படப்பிடிப்பிற்காக விஜய் எடுத்த முக்கிய முடிவு
அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், ப்ரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதி பணிகள் நடந்துவருகின்றன.
இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தை ஜூலை ஒன்றாம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | என்னது பீஸ்ட் 200 கோடி வசூலா?
தொடர் தோல்விகளை கொடுத்துவரும் தனுஷ் இப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றி கணக்கை தொடங்குவாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR