த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது "ஜெய்பீம்" (Jai Bhim) படம். தமிழக முதல்வர் உட்பட பல அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். ஆனால் அந்த படத்தில் இருந்த சில காட்சிகள் வன்னியர் சமூகத்தை இழிவுப்படுத்துவதாக இருக்கிறது என சர்ச்சை எழுந்ததை அடுத்து, அந்த காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டது. இருப்பினும் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss), சூர்யாவை நோக்கி ஒன்பது கேள்விகள் முன்வைத்து ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார். நடிகர் சூர்யாவும் அந்த கடிதத்திற்கு விரிவான பதில் அளித்திருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்பிறகும் ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பான சர்ச்சை அடங்கவில்லை. அடுத்ததாக வன்னியர் சங்கத்தின் தலைவர் அருள் மொழி தரப்பில் இருந்து ஜெய்பீம் படத்தின் தயாரிப்பு நிறுவனம் 2டி எண்டர்டெயின்மெண்ட், தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் (T. J. Gnanavel) மற்றும் படம் வெளியான ஓடிடி தளமான அமேசான் (Amazon Prime Video) ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.


நாளுக்கு நாள் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், திரைத்துறைச் சார்ந்த பிரபலங்கள் பலரும் நடிகர் சூர்யாவுக்கு (Actor Suriya) ஆதரவாக தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வரிசையில் முக்கிய மற்றும் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறனும் இணைந்துள்ளார்.


ALSO READ | ஜெய் பீம் படத்தால் அடுத்த சிக்கலில் சூர்யா; 5 கோடி நஷ்ட ஈடு


ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக இயக்குனர் வெற்றிமாறன் (Director Vetrimaran) தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், "சரியான விஷயத்தைச் செய்வதற்காக யாரும் தாழ்வாக உணரும் நிலைக்குத் தள்ளப்படக் கூடாது. நடிகர் சூர்யா ஒரு திரை நட்சத்திரத்திற்கான அர்த்தத்தை மறுவரையறை செய்துள்ளார் எனப்பதிவிட்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.



இயக்குனர் வெற்றிமாறன் கூறியது, "இந்தப் படத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் அவல நிலையை உலகறியச் செய்ய வேண்டும் என்ற இயக்குநர் த.செ.ஞானவேலின் பொறுப்புணர்வும், சமூக நீதியை நிலைநிறுத்துவதில் திரையிலும், நிஜத்திலும் நடிகர் சூர்யா மேற்கொள்ளும் தொடர் முயற்சிகளும் உண்மையிலேயே ஊக்கமளிக்கின்றன.


#JaiBheem இத்தகைய படங்கள் சமூக நீதி ஏற்படக் கூடாது என விரும்புவோருக்கு பதற்றத்தை ஏற்படுத்துவது இயல்பே. #WeStandWithSuriya சமூகத்தில் நிலவும் பேதங்களையும், அநீதிகளையும் கேள்வி கேட்கும் திரைப்படங்களும் கூட சமூக நீதி ஆயுதங்களே. ஆகையால் நாங்கள் ‘ஜெய் பீம்’ படக்குழுவுடன் எப்போதும் நிற்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.


ALSO READ | ஜெய்பீம் விவகாரம் விலை பேச முற்படுவது வேதனை - நாசர் கவலை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR