திருடன் இல்லாத ஜாதி இருக்கா? வெளியானது சூர்யாவின் ஜெய் பீம் டீஸர்!

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெய் பீம் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது  

Written by - ZEE Bureau | Last Updated : Oct 15, 2021, 02:46 PM IST
திருடன் இல்லாத ஜாதி இருக்கா? வெளியானது சூர்யாவின் ஜெய் பீம் டீஸர்!

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் ஜெய் பீம் என்ற திரைப்படம் அடுத்த மாதம் நவம்பர் 2ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.  தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.  பழங்குடி மக்களின் கஷ்டத்தை எடுத்து கூறும் விதமாக இத்திரைப்படம் உருவாகி உள்ளது.  சூர்யா இந்த படத்தில் ஒரு வக்கீலாக நடித்துள்ளார்.  பத்திரிகையாளராக இருந்து இயக்குனரான ஞானவேல் யாரும் பேச நினைக்காத ஒரு கதையை படமாக எடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்டவங்களுக்கு மறுக்கபட்ட நீதி,அவங்களுக்கு நடந்த அநீதிய விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும், நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம், திருடன் இல்லாத ஜாதி இருக்கா போன்ற பவர்புல் வசனங்கள் இந்த டீசரில் இடம் பெற்றுள்ளது.  மேலும், டீசரில் பிரகாஷ் ராஜ், கர்ணன் புகழ் ரஜிஸா விஜயன் போன்றோரும் காட்டப்படுகின்றனர்.  சூர்யாவை எதிர்த்து பேசும் வக்கீலாக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார் என்பது டீசரில் தெரிகிறது.  இதுநாள் வரை இந்த படத்தின் மீது எந்த ஒரு ஆர்வமும் வராமல் இருந்த ரசிகர்களுக்கு தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

jiabhim

தமிழகத்தில் நடக்கும் மக்கள் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து தன் ஆதரவை கொடுத்து வரும் சூர்யா தற்போது திரைப்படம் மூலமும் கொடுக்க முயற்சித்து இருக்கிறார்.  சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமாக 2டி என்டெர்டைன்மெண்ட் இந்த படத்தை தயாரித்துள்ளது.  கூட்டத்தில் ஒருவன் என்ற படத்திற்கு பிறகு ஞானவேல் இந்த படத்தினை இயக்கி உள்ளார்.  இந்த திரைப்படம் வெளிவந்த பிறகு பழங்குடி மக்கள் படும் துன்பங்களின் மீது அனைவரது பார்வையும் திரும்பும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

 

ALSO READ அவனுக்கு கரையும் கிடையாது, தடையும் கிடையாது! வெளியானது அண்ணாத்த டீஸர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News