கேகேஆர் சாம்பியன்... சந்தோஷத்தில் கம்பீருக்கு முத்த பரிசு கொடுத்த ஷாருக்கான்! ஓடி வந்து கேட்ட ரிங்கு சிங்

Sharukh Khan's Emotional kisses to Gautam Gambhir ; ஐபிஎல் 2024 சாம்பியன் பட்டத்தை வென்றதும் சந்தோஷத்தில் திளைத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக்கான், உடனடியாக கம்பீர் முதல் ரிங்கு சிங் வரை எல்லோருக்கும் முத்த பரிசு கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Written by - S.Karthikeyan | Last Updated : May 27, 2024, 11:47 AM IST
  • கொல்கத்தா சாம்பியன் ஆனதும் ஷாருக் கொடுத்த முதல் பரிசு
  • கவுதம் காம்பீரை கட்டியணைத்து நெத்தியில் முத்தம் கொடுத்தார்
  • சன்ரைசர்ஸ் அணி இரண்டாவது முறையாக இறுதிப் போட்டியில் தோல்வி
கேகேஆர் சாம்பியன்... சந்தோஷத்தில் கம்பீருக்கு முத்த பரிசு கொடுத்த ஷாருக்கான்! ஓடி வந்து கேட்ட ரிங்கு சிங் title=

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அசத்தியது. இப்போட்டியை காண கொல்கத்தாவில் இருந்து தனி விமானம் மூலம் குடும்பத்துடன் வந்த ஷாருக்கான் சேப்பாக்கம் மைதானத்தில் கேகேஆர் அணி வென்றதும் சந்தோஷத்தில் திளைத்தார். குறிப்பாக, வெற்றி இலக்கை கேகேஆர் அணி எட்டியவுடன் சந்தோஷத்தின் உச்சத்துக்கே சென்ற ஷாருக்கான், கம்பீர் முதல் ரிங்கு சிங் வரை எல்லா வீரர்களுக்கும் முத்த பரிசு கொடுத்து மகிழ்ச்சியை வெளிக்காட்டினார். குறிப்பாக, வெற்றி இலக்கை கேகேஆர் அணி எட்டியதும் கம்பீரை ஓடி வந்து கட்டியணைத்து கொண்ட ஷாருக்கான், அவருக்கு நெத்தியில் முத்தம் கொடுத்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார். அடுத்து கூட்டத்துக்கு மத்தியில் அங்கும் இங்கும் கொண்டாட்டத்தில் இருந்த ரிங்கு சிங், ஷாருக்கானை பார்த்ததும் ஓடி வந்தார். 

மேலும் படிக்க | ஐபிஎல் மெகா ஏலம்... ராஜஸ்தான் ராயல்ஸ் ரிலீஸ் செய்யப்போகும் 5 முக்கிய வீரர்கள்!

கேகேஆர் அணியின் செல்லப்பிள்ளையாக அவரை வைத்திருப்பதால் ஷாருக்கான் ரிங்குவை பார்த்ததும் நெஞ்சார கட்டியணைத்து முத்தம் கொடுத்து பாராட்டினார். ஆன்ரே ரஸ்ஸல் மகிச்சியில் கத்திகொண்டிருந்தபோது திடீரென கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார். ஆனந்த கண்ணீரை வெளிப்படுத்தியவாறே ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றதை சக அணி வீரர்களுடன் கட்டியனைத்துக் கொண்டாடினார். சுனில் நரைன், கேகேஆர் அணியின் ஆலோசகர் கவுதம்கம்பீரை தூக்கி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிக்காட்டினார். உடனே கம்பீர் சுனிலை தூக்கி கொண்டாடினார்.

கம்பீரிடம் இப்படியான அணுகுமுறைகளை எல்லாம் முன்பு யாரும் பார்த்தது இல்லை என்பதால், எல்லோரும் ஆச்சரியத்துடன் இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். கம்பீர் தான் சுனில் நரைனை இந்த ஐபிஎல் சீசனில் ஓப்பனிங் இறங்க வைத்தார். இதனை பேட்டி ஒன்றில் கூட நரைன் தெரிவித்திருந்தார். மற்றொரு புறம் ஷாருக்கான் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரை தேடிப் பிடித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தபோது, ஷாருக்கானின் மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோரும் மைதானத்துக்குள் வந்து கொல்கத்தா அணி வீரர்களை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றதற்காக வாழ்த்தினர். அப்போது, ஷாருக்கானின் மகள், ஆனந்த கண்ணீர்விட கேமரா எல்லாம் அவரையே ஃபோகஸ் செய்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் செம ஜாலியாக துள்ளிக்  குதித்துக் கொண்டிருந்தார்.

ஐபிஎல் சாம்பியன் கோப்பையை கையில் வாங்கியதும், கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸிபோல் கோப்பையை ஜாலியாக ஏந்திவந்து, சக அணி வீரர்களிடம் கொடுத்து கொண்டாடினார். கடைசியாக நரைன் பிறந்தநாளும் சேர்ந்து கொள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நேற்று இரவு கொண்டாட்டம் இரு மடங்கானது. ஆட்டம் பாட்டம் பார்டி என ஐபிஎல் சாம்பியன் கேகேஆர் அணி வீரர்கள் நேற்றைய இரவை கொண்டாடி தீர்த்தனர். இந்த வீடியோக்கள் எல்லாம் சமூக ஊடகங்களில் இப்போது டிரெண்டிங்கில் இருக்கிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் சாம்பியன் வென்ற கேகேஆர் அணியினருக்கு சிறப்பு பரிசுகளை கொடுக்க இருக்கிறாராம் அந்த அணியின் உரிமையாளர் ஷாரூக்கான்.

மேலும் படிக்க | IPL 2024 Champions: 3ஆவது முறையாக சாம்பியனானது KKR... கம்பீரமாக வென்ற கம்பீர் படை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News