சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் மாற்றம் - முன்னேற்றம்..!

சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்: கும்ப ராசியில் சஞ்சரித்து வரும் சனி பகவான் ஜூன் 29 அன்று,  வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதனால், சில ராசிகளுக்கு பொன்னான காலம் தொடங்கும் என கணித்துள்ளனர் ஜோதிடர்கள்.

கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கும் சனீஸ்வரன், பெயர்ச்சி ஆகும் போது மட்டுமல்ல, அதன் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களும் அனைவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் சனி பகவானின் வக்ர பெயர்ச்சி பலன்களை அறிந்து கொள்ளலாம்.

1 /8

சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்:  நீதிக் கடவுளாக கருதப்படும் சனிபகவான், வரும் ஜூன் 29ம் தேதி, கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்து, நவம்பர் 15 வரை வக்ர நிலையில் இருப்பார்.  இதனால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்படும் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.

2 /8

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதத்தில் நடைபெறும் சனி வக்ர பெயர்ச்சி காரணமாக தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவார்கள்.  திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். சில நல்ல செய்திகள் கிடைக்கலாம். இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். நீண்ட தூர பயணம் செல்லலாம். புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

3 /8

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சியினால் மிகப்பெரிய ஆசை நிறைவேறும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். பெரிய சொத்து சம்பந்தமான வேலைகள் நடக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். வீடு கட்டும் பணி தொடங்கலாம். பதவி உயர்வு- சம்பள உயர்வு கிடைக்கும். செல்வாக்கு மிக்கவர்களுடனான உங்கள் அறிமுகமும் அதிகரிக்கும். தொழிலதிபர்களின் வருமானமும் அதிகரிக்கும்.

4 /8

சிம்மம்: சிம்ம ராசியினருக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு, வாழ்க்கை மனதிற்கு பிடித்த பாதைக்குத் திரும்புவது போல் தோன்றும். தொழில் வாழ்க்கையில் முன்னேற வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வருமானம் வேகமாக அதிகரிக்கும். பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இழந்த மதிப்பும் மரியாதையும் மீண்டும் கிடைக்கும். பொருளாதார நிலை வலுப்பெறுவதால் நிம்மதி உண்டாகும்.

5 /8

கன்னி: சனி வக்ர பெயர்ச்சியினால், கன்னி ராசியினருக்கு வேலையில், தொழிலில் ஆதாயம் உண்டாகும். சில முக்கியமான வேலைகள் முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.  திடீர் பண வரௌ மகிழ்ச்சியைத் தடும். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சில குழப்பங்கள் இருக்கலாம். பொறுமையை இழக்காதீர்கள்.

6 /8

மகரம், கும்பம் மற்றும் மீன ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி நடந்து கொண்டிருக்கும் நிலையில், சனி வக்ர பெயர்ச்சியின் போது இவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். தனிப்பட்ட வாழ்க்கையில், தொழிலில், வேலையில் தேவையற்ற தடைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம்.

7 /8

சனி பகவானின் அருள் பார்வை கிடைக்க சனிக்கிழமையன்று, ஏழை எளிய மக்களுக்கு  அன்னதானம் செய்வதும், அவர்களுக்கு உடைகள், காலணிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை தானமாக வழங்குவதும் பலன் கொடுக்கும். கருப்பு உளுந்து, இரும்பு பொருட்கள், நல்லெண்ணெய் போன்றவற்றையும் தானம் செய்யுங்கள். எறும்புகளுக்கு தேன் மற்றும் சர்க்கரை அளிப்பதும் சனிபகவானை மகிழ்விக்கும்.

8 /8

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.