ரூ.20 ஆயிரம் சம்பாத்தித்தாலும் நீங்கள் முதலீடு செய்து கோடீஸ்வரர் ஆகலாம் - லாபம் வரும் வழி இதோ!

Mutual Funds SIP Investment: மாதம் ரூ. 20 ஆயிரம் தான் சம்பாதிக்கிறீர்கள் என்றால் எப்படி நான் முதலீடு செய்வது நீங்கள் யோசிக்கிறீர்களா... இந்த திட்டத்தை பின்பற்றினால் நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம். அது எப்படி என்பதை இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : May 27, 2024, 07:35 PM IST
  • முதலீடு செய்வது நீண்ட காலம் திட்டமாகும்.
  • உடனடியாக லாபம் வேண்டுமென்றால் ரிஸ்க் அதிகமாக இருக்கும்.
  • எனவே, ரிஸ்க் வேண்டாம் என்றால் முதலீடு நீண்ட காலம் இருக்க வேண்டும்.
ரூ.20 ஆயிரம் சம்பாத்தித்தாலும் நீங்கள் முதலீடு செய்து கோடீஸ்வரர் ஆகலாம் - லாபம் வரும் வழி இதோ! title=

Mutual Funds SIP Investment: வருமானத்தை சேமித்து வைக்க வேண்டும் என்ற எண்ணமும், சிறு தொகையையாவது காப்பீடு அல்லது முதலீட்டில் போட வேண்டும் என்ற விழிப்புணர்வு தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் முதலீட்டுற்கான வாய்ப்பு தற்போது அதிகரித்துள்ளது எனலாம். 

வங்கி, அஞ்சல் அலுவலகம், மியூச்சுல் ஃபண்ட், பங்குச்சந்தை என பல முதலீட்டு வாய்ப்புகள் முன்பிருந்தே இருந்தாலும் தற்போது ஆன்லைனிலேயே முதலீடு செய்யலாம் என்பது இன்னும் மக்களை முதலீடுகளை நோக்கி ஈர்த்திருக்கிறது எனலாம். குறிப்பாக இளைஞர்களும் அதிகமாக முதலீடு செய்வதாக சில ஆய்வு முடிவுகளும் நமக்கு தெரிவிக்கின்றன. 

இந்த பிளானை பின்பற்றுங்க...

இருப்பினும் இன்னும் சிலருக்கு முதலீடு செய்வதற்கு பெரும் தயக்கம் இருக்கிறது எனலாம். முதலீடு செய்ய வேண்டும் என்றால் 40 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மாதம் வருமானம் பெறுவார்தான் செய்ய முடியும் என்பது பல பேரின் எண்ணமாக இருக்கிறது. அந்த வகையில் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்போரும் தற்போது தங்களின் வருமானத்தில் சிறு தொகையை முதலீடு செய்து வருங்காலத்தில் பெரிய பலன்களை தரக்கூடிய திட்டம் குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிக்க | FD முதலீடுகளுக்கு அதிக வட்டியை அள்ளித் தரும் சில வங்கிகள்..!!

நீங்கள் 15 ஆயிரம் ரூபாய் வருமானம் பெற்றாலும் சரி, 20 ஆயிரம் ரூபாய் வருமானம் பெற்றாலும் இந்த திட்டத்தை பின்பற்றி உங்களின் பணத்தை நிர்வகித்தால் நீண்ட கால முதலீட்டில் உங்கள் வருங்காலத்தில் கோடீஸ்வரர் ஆகலாம். அதை செய்ய நீங்கள் 70: 15: 15 என்ற திட்டத்தை பின்பற்ற வேண்டும். அதாவது, உங்கள் வருமானத்தில் நூற்றில் 70 சதவீதத்தை உங்களின் அனைத்து செலவுகளுக்கும் பயன்படுத்தவும். மீதம் உள்ள 30 சதவீதத்தில், 15 சதவீத பணத்தை அவசரத் தேவைக்கு ஒதுக்கிவைத்துவிட்டு பாக்கி 15 சதவீத்தை முதலீட்டில் போடலாம்.

மாதம் ரூ. 3 ஆயிரம் போதும்...

அதாவது நீங்கள் ரூ. 20 ஆயிரம் மாத வருமானம் பெறுபவர் என்றால் உங்கள் மாதச் செலவு அனைத்தையும் ரூ.14 ஆயிரத்திற்கு வைத்துக்கொள்ளவும். மீதம் உள்ள ரூ. 6 ஆயிரத்தில் ஒரு பங்கை அவசரத் தேவைக்கு எடுத்து வைக்கும். பாக்கி ரூ.3 ஆயிரத்தை முதலீடு செய்யுங்கள். மாதாமாதம் ரூ. 3 ஆயிரத்தை முதலீடு செய்தால் நீண்ட கால அடிப்படையில் நீங்கள் நிச்சயம் கோடீஸ்வரர் ஆகி விடலாம். 

அது சரி 3 ஆயிரம் ரூபாயை எதில் முதலீடு செய்து எப்படி, கோடீஸ்வரர் ஆவது என்றுதானே கேட்கிறீர்கள்... அதனையும் தொடர்ந்து பார்க்கலாம் வாருங்கள். மியூச்சுவல் ஃபண்டில் SIP (Systematic Investment Plan) மூலம் மாதாமாதம் முதலீடு செய்யலாம். மியூச்சுல் ஃபண்டில் சராசரியாக ஒரு ஆண்டில் 12% வருமானம் கிடைக்கும். மேலும், கூட்டு வட்டியும் உங்களுக்கு வருங்காலத்தில் கிடைக்கும். இதனால் உங்களின் பணத்தின் மதிப்பு அதிகரிக்கும். 

இப்படி ரூ.3 ஆயிரம் ரூபாயை தொடர்ந்து 30 ஆண்டுகள் வரை முதலீடு செய்து வந்தால் மொத்தம் 10 லட்சம் 80 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு வட்டி மட்டும் 95 லட்சத்து 9 ஆயிரத்து 741 ரூபாய் வரும். அதாவது மொத்தத்தில் நீங்கள் 1 கோடியே 5 லட்சத்து 89 ஆயிரத்து 741 ரூபாயை பெற்று கோடீஸ்வரர் ஆகிவிடுகிறீர்கள். எனவே, இன்னும் என்ன யோசனை செய்துகொண்டிருக்கிறீர்கள். ஒரு நல்ல நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று மியூச்சுவ் ஃபண்டில் முதலீடு செய்ய தயாராகுங்கள் மக்களே...

(பொறுப்பு துறப்பு: மியூச்சுல் ஃபண்ட் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் திட்டம் சார்ந்த அனைத்து விஷயங்களை ஆய்வு செய்யவும் அல்லது உங்கள் நிதி ஆலோசகரை அணுகவும். இதற்கு ஜீ நியூஸ் - Zee News பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | லட்சங்களில் வட்டி வருமானம் கொடுக்கும்... அஞ்சலக FD சேமிப்பு திட்டம்...!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News