லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் (Kamal Haasan) கூட்டணி சேரும் படத்தில் தலைப்பு பற்றிய உறுதி செய்தி பரவி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஜய்யின் ‘மாஸ்டர்' பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj ) தனது அடுத்த பட குறித்து இன்று மாலை அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில் கூறியதாவது., “எனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.


 


 



 


ALSO READ | அடுத்த படம் குறித்து அதிரடி ட்விட் போட்ட மாஸ்டர் பட இயக்குனர்....


 


அவரது புதிய படம் அவரது சினிமா முன்னோடி ‘உலக நாயகன்' கமல் ஹாசனை முக்கிய கதாபாத்திரத்தில் கொண்டிருக்கும் என்பது நீண்ட காலமாக ஒரு சலசலப்பு உள்ளது. இந்நிலையில் இப்போது, அவர் அறிக்கப்படவுள்ள திரைப்படம் நிச்சயம் கமலுடன் இருக்கவே வாய்ப்பிருப்பதாகவும், இந்த படத்திற்கு ‘எவ்னென்று நினைத்தாய்' என்று பெயரிடப்பட்டுள்ளது என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புதிய படம் த்ரில்லர் ஜானர் இல் இருக்கும் என்று கூறப்படுகிறது. 


இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜயின் (Thalapathy Vijay) மாஸ்டர் (Master) வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். கொரோனா பாதிப்பால் இந்தப் படம் இன்னும் ரிலீசாகாமல் இருந்து வருகிறது. மாஸ்டர் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர். 


 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR 


ALSO READ | Bigg Boss தமிழ் சீசன் 4-ல் கலந்து கொள்ளும் 11 பிரபலங்களின் பட்டியல் வெளியீடு!!