அடுத்த படம் குறித்து அதிரடி ட்விட் போட்ட மாஸ்டர் பட இயக்குனர்....

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த பட குறித்து நாளை மாலை அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Last Updated : Sep 15, 2020, 07:41 PM IST
    1. லோகேஷ் கனகராஜ் தளபதி விஜயின் (Thalapathy Vijay) மாஸ்டர் (Master) வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.
    2. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த பட குறித்து நாளை மாலை அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அடுத்த படம் குறித்து அதிரடி ட்விட் போட்ட மாஸ்டர் பட இயக்குனர்.... title=

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj ) தனது அடுத்த பட குறித்து நாளை மாலை அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில் கூறியதாவது., “எனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

லோகேஷ் கனகராஜ் தளபதி விஜயின் (Thalapathy Vijay) மாஸ்டர் (Master) வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். மாநகரம், கைதி படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். கொரோனா பாதிப்பால் இந்தப் படம் இன்னும் ரிலீசாகாமல் இருந்து வருகிறது.

 

ALSO READ | மாஸ்டர் திரைப்படத்தின் பொலக்கட்டும் பறை பறை பாடல் 

மாஸ்டர் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர். 

லோகேஷ் இயக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் ரஜினி அல்லது கமல் நடிப்பில் இருக்கலாம் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

ALSO READ | மாஸ்டர்: நண்பர் அஜித் போல் கோர்ட் சூட் ....வைரலாகும் விஜய் வீடியோ...

Trending News