கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தின் அப்டேட் இதோ
மித்ரன் இயக்த்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் (Sardar) படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.
மித்ரன் இயக்த்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் (Sardar) படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.
இரும்புத்திரை, ஹீரோ படங்களுக்கு பிறகு இயக்குனர் பி.எஸ். மித்ரன் (PS Mithran) கார்த்தியை (Actor Karthi) வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப்போவதாக அறிவித்தார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் போஸ்டர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷிகன்னா, மேலும் கர்ணன் படப்புகழ் ரஜிஷா விஜயன் நடிக்கின்றனர்.
ALSO READ | Actor Karthi படத்தின் முக்கிய அப்டேட்: இந்த மாதம் துவங்கும் ஷூட்டிங்
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் (GV Prakash) இசையமைக்கிறார். கொரோணா இரண்டாம் அலையின் காரணமாக திட்டமிட்டப்படி இப்படத்தின் வேலைகளை தொடங்க முடியவில்லை.
இந்நிலையில் தற்போது 4 நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடத்த அப்படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்துள்ளனர் படக்குழுவினர். மாஸ்டர் திலீப்சுப்புராயன் தலைமையில் படத்தின் முக்கியமான ஸ்டண்ட் காட்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் ஷீட்டிங்களை முடித்துவிட்டு அடுத்த வாரம் பொன்னியின் செல்வன் படத்திற்காக பாண்டிச்சேரி செல்கிறார் கார்த்தி.
அண்மையில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் கலவையான விமர்சனங்களுடன் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. பாக்கியராஜ் கண்ணன் இயக்கி இருந்த இந்த திரைப்படம் மூலம் கார்த்தி ஜோடியாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா.
ALSO READ: D44-ல் மீண்டும் இணையும் தனுஷ்-அனிருத்: விரைவில் படப்பிடிப்பு துவக்கம், ஆவலில் ரசிகர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR