இயக்குநர்கள் ஜே.டி-ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள படம் 'தி லெஜண்ட்'.  லெஜண்ட் சரவணன் சயின்டிஸ்ட்டாக நடித்துள்ள இப்படத்தில் ஊர்வசி ராட்டெலா, கீதிகா, விவேக்,  நாசர், பிரபு, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து இரு வாரங்களுக்கு முன்பு வெளியான வாடிவாசல் எனும் பாடல் இணையத்தில் ட்ரெண்டானது. இதையடுத்து இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. ஆக்‌ஷன் காட்சிகள், வித்யாசமான லொக்கேஷன்கள் என அந்த ட்ரெய்லர் அமைந்திருந்தது.


இந்நிலையில் இந்த ட்ரெய்லர் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. அதாவது தி லெஜண்ட் படத்தின் ட்ரைலர் இதுவரை சுமார் 26 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. ஆனால் அஜித்தின் வலிமை திரைப்படம் 24 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது. வலிமை ட்ரெய்லர் வெளியாகி சுமார் 5 மாதங்கள் ஆகின்றன.



தி லெஜண்ட் ட்ரெய்லர் வெளியாகி வெறும் ஒரு வாரம் மட்டுமே ஆகியுள்ளது. ஒரு வாரத்துக்குள்ளாகவே அஜித்தின் வலிமையை ஓவர் டேக் செய்துள்ளது நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.


மேலும் படிக்க | மதுரை ஆதீனத்தைக் கடுப்பேற்றிய நடிகர் விஜய்யின் படம் இதுவா?!


வலிமை மட்டுமல்லாமல் ரஜினியின் அண்ணாத்த ட்ரெய்லரையும் ஓரங்கட்டியுள்ளது இப்படம். அண்ணாத்த ட்ரெய்லர் வெளியாகி 7 மாதங்கள் கடந்தும் 16 மில்லியன் பார்வைகளைத்தான் பெற்றுள்ளது. அந்த வகையில் அண்ணாத்த பட ட்ரெய்லரைவிட 10 மில்லியன் பார்வைகளை இப்படம் கூடுதலாகப் பெற்றுள்ளது.


மேலும் படிக்க | விக்ரம்: பாடல் வரிகள் திடீர் நீக்கம்- அரசியல் நெருக்கடி காரணமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR