பிரபல நடிகை தியா மிர்ஸா சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி வைரலாகிறது. வைரலாகும் செய்திக்கு காரணம் அவர், திருமணத்திற்கு முன்பே உடலுறவு கொள்வது பற்றி வெளிப்படையாக பேசியிருந்தது தான். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்தவர் தியா மிர்ஸா. தற்போது பாலிவுட் படங்களிலும், வெப் சீரியல்களிலும் நடித்து வரும் நடிகை தியா மிர்ஸா, திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் சமூக ஆர்வலர் என பல துறைகளில் வெற்றிகரமாக இயங்கி வருகிறார்.


அண்மையில் தியா மிர்ஸா வெளியிட்ட கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. திருமணத்திற்கு முன்பே உடலுறவு வைத்துக் கொள்வது, கர்ப்பமாவது, குழந்தைப் பெற்றுக் கொள்வது என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை அதில் யாரும் தலையிட முடியாது என்று தியா ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.



இந்தக் கருத்தை தெரிவித்த அவர், அமெரிக்காவில் பெண்களுக்கு கருக்கலைப்பு உரிமையை பறித்த அண்மை சட்டத்தையும், அதை எதிர்த்த போராட்டங்களையும் பற்றி தனது கருத்தை தெரிவித்தார்.


மேலும் படிக்க | பொன்னியின் செல்வன்: வந்தான் வந்தியத்தேவன், கார்த்தி கதாபாத்திரத்தின் போஸ்டர் ரிலீஸ்


ஹைதராபாத்தை சேர்ந்த நடிகை தியா தனது முதல் கணவரான திரைப்படத் தயாரிப்பாளர் சாஹில் சங்காவை 2019ம் ஆண்டில் பிரிந்த பிறகு, கடந்த ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் வைபப் ரேகியை திருமணம் செய்துக் கொண்டார்.


அந்த திருமணத்தை, பெண் அய்யர் நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது திருமண சடங்குகளின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துக் கொண்ட தியா, #ரைஸ்அப் #ஜெனரேஷன் ஈகுவாலிட்டி என்ற ஹேஸ்டேக்குகளையும் பதிவிட்டார். 



இப்படி தனது வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தனக்கு சரி என்று தோன்றும் விஷயத்தை தைரியமாக பேசவும், நடத்தவும் தயங்காதவர் தியா மிர்ஸா.  கடந்த ஆண்டு திருமணமான பிறகு, தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த அவருக்கு சில மாதங்களிலேயே குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. 


1999 ஆம் ஆண்டு அரவிந்த் சாமி கதாநாயகனாக நடித்த என் சுவாசக் காற்றே படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி தமிழில் தனது காலை பதித்தார். பெங்காலி,  ஈரான் மொழிப் படங்களிலும் நடித்துள்ள தியா, 'பீட்' படத்திலும், 'தக் தக்' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.


கல்யாணம் செய்வதற்கு முன்பு உடலுறவு கொள்வதும், குழந்தைப் பெற்றுக் கொள்வது கர்ப்பம் குறித்து சமூகத்தில் பிற்போக்கு எண்ணங்களே பரவலாக  இருப்பதாக தியா தெரிவித்தார். 


உண்மையில், திருமணமும், குழந்தைப்பேறும் அவரவர் உரிமை என கூறும் தியா, தங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்ய பாலியல் ரீதியான உறவு வைத்துக் கொள்வது ஒருவரின் தனிப்பட்ட விஷயம் என தெரிவித்துள்ளார். இந்த வெளிப்படியான பேச்சு பரவலாக பேசப்படுகிறது. 


மேலும் படிக்க | வாடிவாசல் படத்தின் அப்டேட் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR